வடகிழக்கு பருவமழை தொடங்கியதிலிருந்து மதுரை, தேனி, திண்டுக்கல் போன்ற மாவட்டங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது. மேலும், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத்தீவு ஒட்டிய பகுதிகளின் வளிமண்டல மேலடுக்கில் சுழற்சி நிகழ்கிறது.இதனைத் தொடர்ந்தும் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மிதமானது முதல் கனமான மழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக, நேற்று தேனி மாவட்டத்திற்கு கனமழைககான எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து தேனி மாவட்டத்தின் கலெக்டர் இன்று ( 26.10.2024 ) தேனி மாவட்டத்திலுள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அளித்துள்ளார்.
தமிழகத்தில் நேற்று ( 25.10.2024 ) ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டிருந்து. மேலும், நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், நாமக்கல், கரூர் மாவட்டங்களில் கனமழைக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து நேற்று தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதனைத் தொடர்ந்து இன்றும் தேனி மாவட்டத்தில் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.