இனி சரக்கு வாங்க கடைகளுக்கு செல்ல வேண்டாம்! ஆன்லைனில் புக் செய்தால் வீடு தேடி வரும்!
புதுச்சேரியில் இன்று முதல் மதுபானங்களின் விவரங்களை ஆன்லைனிலேயே பார்த்துக் கொள்ளும் முறை அமலுக்கு வருகிறது.புதுச்சேரி என்றாலே அனைவரையும் கவர்வது மதுபானங்கள் தான். வெளிநாட்டில் உள்ளவர்கள் மற்றும் உள்நாட்டினர் என அனைவரும் மதுபானத்திற்கு அடிமையாகி உள்ளனர்.அவர்களின் சொர்க்க பூமியாக புதுச்சேரி உள்ளது.
மது விரும்பிகளுக்கு சிரமம் கொடுக்காத வகையில் ஆன்லைனில் மது விலையை அறிந்து கொள்ள புதிய சட்டத்தை புதுச்சேரி மாநிலம் கொண்டு வந்துள்ளது.அந்தவகையில் புதுச்சேரி மாநிலக் காவல் துணை ஆணையர் சுதாகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.அந்த அறிக்கையில் அவர் கூறியதாவது, சட்டப்பேரவை தேர்தல் விரைவில் அறிவிக்கபட உள்ளது.
ஆகையால் மது விற்பனை செய்யும் இடங்கள்,குடோன்கள்,மற்றும் ஆலைகள் என எல்ல இடங்களிலும் சிசிடிவி கேமராவை பொருத்துமாறு அறிவுறுத்தியுள்ளார்.இந்த அறிக்கை ப்ளாக்கில் சரக்கு வாங்கி விற்போர் போன்றவர்களுக்கு பேரதிர்ச்சியாக இருக்கும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
இதனையடுத்து அந்த கேமரா நேரடி முறையில் காவல் துணை ஆணையர் அலுவலகத்துக்கு இணைக்க வேண்டும் என மற்றொரு அறிக்கையையும் தந்துள்ளார்.இதற்கான விவரங்களை வரும் 20 ஆம் தேதிக்குள் தெரிவித்துவிட வேண்டும் என்றும் அதில் கூறியுள்ளார்.
மதுவிரும்பிகளுக்கு நற்செய்தியாக,இன்று மதுபானம் உரிமம் பெற்ற அனைத்து ஆலைகளும் தனது தினசரி விற்பனை நிலையை ஆன்லைனில் பதிவிட வேண்டும் என கூறியுள்ளார்.இதனால் மதுவின் விலை மதிப்பு எல்ல இடங்களிலும் ஒரே நிலையில் இருக்கும்.இந்த அறிவிப்பானது இன்று முதல் அமலுக்கு வர உள்ளது.