உங்களுக்கு குலதெய்வம் இல்லையா?இதை பண்ணி பாருங்கள்!! நடப்பது உங்களுக்கே புரியும்!…
நமது குடும்பங்கள் தழைக்க குலதெய்வ வழிபாடு என்பது மிக முக்கியமான ஒன்றாகும்.திருமணம் செய்த பெண்களுக்கு பிறந்த வீட்டு குலதெய்வம் மற்றும் புகுந்த வீட்டு குலதெய்வம் என இரண்டு உண்டு. திருமணத்திற்குப் பின்னரும் பிறந்த வீட்டு குல தெய்வத்தை வணங்கினால் புகுந்த வீட்டில் ஏற்படும் கஷ்டங்கள் எல்லாம் சமாளிக்கலாம். குலதெய்வங்கள் என்பவை நாம் செய்த கர்மவினையை தீர்க்கவல்லவை. கர்மவினை அதிகம் இருப்பவர்களுக்கு அந்த குலதெய்வம் தெரியாமலேயே போய்விடுமாம்.நம்முடைய குல தெய்வ தோஷம் இருந்தால் பிற தெய்வங்களின் அருள் நமக்கு கிடைக்காது.
குல தெய்வத்தின் பெருமையை நம் தலைமுறையினரும் புரிந்து கொள்ளும் வகையில் ஆண்டுக்கு ஒரு முறையாவது தன் பிள்ளைகளையும் அழைத்துச் சென்று குலதெய்வத்தின் அனுக்கிரகம், அருள், முன்னோர்களின் ஆசியை நம் குடும்பத்திலுள்ள அனைவரும் பெற்று வர வேண்டும். ஒருவரின் பூர்வீகத்தில் உங்களுக்கு முன்பு ஏழு தலைமுறைப் பங்காளிகள் மூன்று தலைமுறையாக ஒன்றுசேர்ந்து எங்கு வாழ்ந்திருக்கிறார்களோ அந்த ஊரில் இருக்கும். இதை குடும்பத்தில் உள்ள மூத்த பெரியவர்களைக் கேட்டு தெரிந்து கொள்ளலாம்.
சிலர் கேட்கலாம், எனக்கு மூத்த பெரியவர்கள் யாரும் இல்லை என்று இருப்பவர்களுக்கும் எங்கள் குல தெய்வம் எது என்று தெரியவில்லை. என்ன செய்வது என்று கேட்பவர்களும் இருக்க தான் செய்கிறார்கள். ஆனால் இவற்றைப் பற்றி கவலைகொள்ள வேண்டாம்.
நிறைந்த வெள்ளிக்கிழமை அன்று வீட்டு பூஜை அறையில் விடியற்காலை பிரம்ம முகூர்த்தத்தில் குளித்துவிட்டு, அவரவர்கள் வழக்கப்படி நெற்றிக்கு திருநீர் வைத்து கொண்டு பின் ஐந்து முக குத்து விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். அதன் தண்டு பாகத்தில் ஒரு புதிய துணி சாற்றி அதற்கு மேல் பூ சாற்றி, அதன் முன்பு தேங்காய், பழம், வெற்றிலை பாக்கு வைத்து, சர்க்கரைப் பொங்கல் செய்து, தீபம் காட்டி,எங்கள் குல தெய்வம் தெரியாமல் நாங்கள் மன வருத்தத்தில் இருக்கிறோம்.
ஆகவே, எங்கள் குலதெய்வத்தை நினைத்து தங்களையே அவராகப் நினைத்து இந்தப் படையலை சமர்ப்பிக்கின்றோம். இதனைத் தாங்கள் ஏற்றுக்கொண்டு கூடிய விரைவில் எங்கள் குல தெய்வத்தைக் காட்டுவீராக என்று வேண்டிக்கொண்டால், இறைவனின் அருளால் குலதெய்வம் பற்றிய விவரம் உங்களுக்கு ஏதாவது ஒரு வழியில் விரைவாக தெரிய வரும்.அதன் பிறகு நீங்கள் உங்கள் குலதெய்வத்தை கண்டு வழிபட்டு வரலாம்.