உங்கள் கையில் பணம் தங்க வில்லையா? கவலையை விடுங்கள்.. வீண் செலவு வராமல் இருக்க இதை பாலோ பண்ணுங்க!! விரைவில் பலன் கிடைக்கும்!

Photo of author

By Divya

உங்கள் கையில் பணம் தங்க வில்லையா? கவலையை விடுங்கள்.. வீண் செலவு வராமல் இருக்க இதை பாலோ பண்ணுங்க!! விரைவில் பலன் கிடைக்கும்!

1.ஒரு காட்டன் துணி எடுத்து அதில் மஞ்சள் சேர்க்க வேண்டும்.பின்னர் பச்சை கற்பூரம் 3,இலவங்கம் 3,ஏலக்காய் 3 ஆகியவற்றை அந்த காட்டன் துணியில் சேர்த்து சிறு மூட்டை போல் கட்டி ஒரு நூல் கொண்டு கட்டி கொள்ள வேண்டும்.பின்னர் நாம் பணம் வைக்கும் இடமான பணப் பெட்டி,அஞ்சறைப் பெட்டி,பீரோ உள்ளிட்ட இடங்களில் அதனை வைக்க வேண்டும்.

2.வீட்டு பூஜை அறையில் ஒரு உண்டியல் வைத்து தினமும் சில்லறை காசுகளை போட்டு வருவதால் சேமிக்கும் பழக்கம் உண்டாகும்.தேவையற்ற செலவுகளை செய்ய மணம் விரும்பாது.

3.சம்பளம் வாங்கிய உடன் அதில் 1 பங்கை எடுத்து ஒரு பெட்டி அல்லது உண்டியலில் போட்டு அதனுடன் ஏலக்காய்,துளசி,பிரிஞ்சி இலை போன்ற வாசனை நிறைந்த பொருட்களை வைத்து எதற்காகவும் இந்த பணத்தை எடுக்க கூடாது என்று முடிவு செய்து சேர்க்க வேண்டும்.

4.வீட்டில் குபேர சிலை அல்லது புகைப்படம் வைத்து வழிபட்டால் பண கஷ்டம் நீங்கி செல்வம் நாளுக்கு நாள் பெருகும்.

5.பணம் வைக்கும் இடத்தில் கல் உப்பு ஒரு துணியில் பொட்டணம் கட்டி வைப்பது மிகவும் நல்லது.கல் உப்புக்கு எதிர்மறை எண்ணங்களை உள் வாங்கும் சக்தி இருக்கு.இதனால் எதிர்மறை எண்ணங்களை உள்வாங்கி நல்ல எண்ணங்களை வீட்டிற்கு அளிக்கும்.இதனால் லட்சுமி கடாட்சம் வீட்டில் உண்டாகும்.

6.சம்பளம் வாங்கியதும் முதலில் உப்பு கல்லில் ஒரு நாள் முழுவதும் வைத்துவிட்டு பின்னர் எடுக்கவும்.இவ்வாறு செய்வதால் தேவையற்ற செல்வுகள் ஏற்படாது.அதேபோல் வங்கியின் இருந்து நகையை மூண்டு வந்த பின்னர் அதனை அணியவோ அல்லது பீரோவிலோ வைக்க கூடாது.ஒரு கிண்ணத்தில் மஞ்சள் மற்றும் தண்ணீர் சேர்த்து அதில் அந்த நகைகளை போட்டு 1 அல்லது 2 மணி நேரத்திற்கு பிறகு அணியலாம்.

7.அதேபோல் ஒரு பவுல் எடுத்து அதில் கடலை மாவு மற்றும் தண்ணீர் சேர்ந்து நன்கு கலந்து அதில் கடையில் இருந்து வாங்கி வந்த நகைகள் அல்லது வங்கியில் இருந்து மூண்ட நகைகளை போட்டு சில மணி நேரத்திற்கு பிறகு அணியலாம்.

8.நாம் பயன்படுத்தும் வேலட்டில் ஏலக்காய்,துளச,பச்சை கற்பூரம் உள்ளிட்ட பொருட்களை வைப்பதினால் தேவையற்ற செலவுகள் குறையும்.