அனைவருக்கும் செல்வ செழிப்புடன் வாழ வேண்டும் என்ற ஆசை இருக்கத் தான் செய்கிறது.இதற்காக வீட்டை வாஸ்து பார்த்து கட்ட வேண்டியது மிக மிக முக்கியம்.வீட்டில் நேர்மறை எண்ணங்கள் அதிகரிக்க பண வரவு அதிகரிக்க வாஸ்துப்படி வீடு அமைய வேண்டும்.
நம் வீட்டின் முலைகளை நாம் பராமரிப்பதை பொறுத்து வீட்டின் வளம் அதிகரிக்கிறது.குறிப்பாக செல்வத்தை சேர்க்கும் குபேர மூலையில் நாம் தெரியாமல் கூட சில பொருட்களை வைத்துவிடக் கூடாது.
இதனால் நிச்சயம் பணம் சம்மந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும்.வீட்டின் வடக்கு திசையானது குபேரர் மற்றும் மகா லட்சுமி வாசம் இருக்கும் இடமாக பார்க்கப்படுகிறது.வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்கும் திசையும் இந்த வடக்கு தான்.
வீட்டு பூஜை அறையை வடகிழக்குப் பகுதியில் அமைத்தால் செல்வ செழிப்பு உண்டாகும்.சிலர் இந்த திசையில் கனமாக பொருட்கள்,குப்பைத் தொட்டி மற்றும் உடைந்த பொருட்களை வைத்திருப்பார்கள்.இதனால் வீட்டில் எதிர்மறை எண்ணங்கள் அதிகரித்துவிடும்.எனவே வடக்குகிழக்கு பகுதியில் இதுபோன்ற பொருட்கள் இருந்தால் அகற்றிவிடவும்.
கல் உப்பு கலந்த நீரை கொண்டு இந்த வடகிழக்கு திசையை துடைக்கவும்.வடக்கு திசையை பார்த்தவாறு உள்ள சுவற்றில் நெருப்பு சம்மந்தப்பட்ட போட்டோ,சூரிய பகவான் படத்தை மாட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும்.இந்த வடக்கு மற்றும் வடகிழக்கு திசையில் குப்பை மற்றும் தூசு படியாமல் சுத்தமாக வைத்துக் கொண்டால் குபேரர் மற்றும் மகா லட்சுமியின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.