அம்மி, ஆட்டுக்கல் வீட்டில் இந்த இடத்தில் இருந்தால் பண கஷ்டம் வரும்!

Photo of author

By Kowsalya

அம்மி, ஆட்டுக்கல் வீட்டில் இந்த இடத்தில் இருந்தால் பண கஷ்டம் வரும்!

நம் முன்னோர்கள் அனைவரும் அம்மி மற்றும் ஆட்டுக்காலை எந்த இடத்தில் வைத்து இருந்தார்கள்? எந்த இடத்தில் வைத்தால் பணம் பெருகும் ?எந்த இடத்தில் வைக்க கூடாது? என்பதை இந்த பதிவில் பார்ப்போம்.

நம் வீட்டின் வசதிக்கேற்ப அம்மி மற்றும் ஆட்டுக்காலை வைத்து இருந்தால் நிச்சயமாக பண கஷ்டம் வருமாம்.

நம் முன்னோர்கள் அனைவரும் அரைப்பதற்காக அம்மி மற்றும் ஆட்டுக்காலை பயன்படுத்தி வந்தனர். ஆனால் நாம் இன்று நவீன உலகிற்கு மாறி விட்டோம். ஆனால் நாம் பயன்படுத்தாவிட்டாலும் வீட்டில் அம்மிக்கல் மற்றும் ஆட்டுக்கல் கண்டிப்பாக இருக்க வேண்டுமாம்.

பொதுவாக அந்தக் காலத்தில் அம்மிக்கல்லை கொல்லைப்புறத்தில் வைத்திருப்பார்களாம்.

ஆனால் அப்படி கொல்லைப்புறத்தில் இல்லை என்றால் தென்கிழக்கு மூலைகளில் வைப்பது மிக மிக சிறந்ததாம்.

வாஸ்துப்படி வீட்டின் சமையலறையில் இருக்கலாம் ஒரு சிலர் சமையலறையில் அம்மி மற்றும் ஆட்டுக்காலை வைத்திருப்பார்கள்.

இந்த அம்மி மற்றும் ஆட்டுக்கால் கண்டிப்பாக வட கிழக்கு மூலைகளில் அதாவது ஈசானி மூலைகளில் கண்டிப்பாக பாரமான பொருட்கள் இருக்கவே கூடாதாம். அப்படி பாரமான பொருட்கள் இருந்தால் வீட்டில் இருப்பவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்குமாம்.

பணக்கஷ்டம், தொழில் நஷ்டம் மற்றும் மன அழுத்தம் ஆகியவை ஏற்பட்டு கொண்டே இருக்குமாம்.

வடகிழக்கு மூலையான ஈசானி மூலை மிகவும் சுத்தமாக காலியாக இருக்க வேண்டுமாம் அதில் தான் லட்சுமி வீட்டிற்குள் நுழைவார்களாம். அதனால் அந்த இடத்தில் பாரமான பொருட்களால் நிரப்பி விட கூடாதாம்.

அதேபோல் நாம் பயன்படுத்தாவிட்டாலும் அம்மி மற்றும் ஆட்டுக்காலை மிகவும் சுத்தமாக வைத்துக் கொள்ளவும்.

எனவே ஈசானி மூலைகளில் பாரமான பொருட்களை வைக்காதீர்கள். தென்கிழக்கு மூலையில் வைப்பது மிகவும் நல்லது.