தப்பி தவறிக் கூட உங்கள் வீட்டின் முன் இந்த மரங்களை வளர்த்து விடாதீர்கள்!! இது உங்களை கடனாளியாக்கி விடும்!!

Photo of author

By Divya

தப்பி தவறிக் கூட உங்கள் வீட்டின் முன் இந்த மரங்களை வளர்த்து விடாதீர்கள்!! இது உங்களை கடனாளியாக்கி விடும்!!

நமது குடும்ப உறுப்பினர்கள் நிம்மதியாகவும்,மகிழ்ச்சியாகவும் வாழ பல்வேறு பூஜை செய்கின்றோம்.ஆனால் கண் திருஷ்டி,பொறாமை குணம் உடையவர்களால் வீட்டில் எதிர்மறை ஆற்றல் உருவாகி சந்தோஷம்,நிம்மதி அனைத்தையும் இழந்து கஷ்டத்தில் வாழக் கூடிய நிலை சிலருக்கு ஏற்படும்.

செல்வ செழிப்புடன் வாழ்ந்து வந்த சிலர் திடீரென்று பெரும் பணக் கஷ்டத்திற்கு தள்ளப்பட்டு விடுவார்கள்.இதற்கு முக்கிய காரணம் அவர்களின் வீட்டை சுற்றி இருக்கின்ற எதிர்மறை ஆற்றல் தான்.இந்த எதிர்மறை ஆற்றல் கெட்ட எண்ணங்கள் கொண்ட மனிதர்களால் மட்டுமல்ல நாம் வளர்க்கக் கூடிய செடி,மரங்களாலும் ஏற்படக் கூடும்.

பொதுவாக வீட்டை அழகு படுத்தவும்,மன அமைதிக்காகவும் வீட்டை சுற்றி பூச்செடிகள்,மரங்கள் வளர்ப்பதை அனைவரும் விரும்புவர்.ஆனால் சில வகை மரங்கள் நமது வீட்டிற்கு எதிர்மறை ஆற்றலை தரக் கூடியவையாக இருக்கின்றது.அப்படி நமது வீட்டின் வளர்ப்பதால் தீங்கு விளைவிக்க கூடிய மரங்கள் என்னென்ன என்பது குறித்து அறிந்து கொள்வோம்.

1)வீட்டின் முன் அரசமரத்தை வளர்க்க கூடாது.வீட்டின் முன் அரச மரம் இருந்தால் அது நம் செல்வத்தை கரைக்கும்.பண விரயத்தை ஏற்படுத்தும்.எனவே வீட்டின் முன் அரச மரம் வளர்க்காமல் இருப்பது நல்லது.

2)வீட்டின் முன் புளியமரம் வளர்க்க கூடாது.அதேபோல் புளிய மரம் உள்ள இடத்தில் வீடு கட்டுவதை தவிர்க்க வேண்டும்.இதனால் செல்வ இழப்பு ஏற்படும்.

3)வீட்டின் முன் ஒற்றை தென்னை மரம் வளர்க்க கூடாது.இதனால் வீட்டில் துக்க நிகழ்வுகள் ஏற்படும்.எதிர்பாராத ஆபத்துகள் ஏற்படும்.

4)வீட்டின் முன் பேரிட்ச்ச மரத்தை வளர்க்க கூடாது.இதனால் வீட்டில் பணத் தட்டுப்பாடு ஏற்படக் கூடும்.கடன் பிரச்சனை,பணமிழப்பு உள்ளிட்டவை நிகழக் கூடும்.

5)வீட்டின் முன் பனைமரம் இருக்கக் கூடாது.அதை வளர்க்க கூடாது.பனைமரம் இருக்கும் வீட்டில் பணப் பிரச்சனை ஏற்படும்.பணப் பற்றாக்குறை ஏற்படும்.அதேபோல் வீட்டின் முன் விஷச் செடிகள்,முள் செடிகள் வளர்க்க கூடாது.