அத்துமீறும் ஆளுநர் உணர்ந்தாக வேண்டும்! கண்டிக்கும் முரசொலியில் கட்டுரை
உவகாரம் பண்ணவில்லை என்றாலும் உவத்திரம் பண்ணாமல் இருங்கள் என ஆளுநர் ஆர்.என்.ரவியின் செயல்பாடுகளை விமர்சித்து முரசொலி தலையங்கத்தில் கட்டுரை வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டுக்கு ஆளுநராக வந்தால், தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு உதவிகரமாக இருக்க வேண்டும். மேம்பாட்டுக்குத் தேவையான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
மத்தியிர் ஆளும் பாஜகவிடம் சொல்லி தமிழ்நாட்டுக்கான நிதியை வாங்கித் தருவதற்கு முயற்சிக்கலாம். ஜி.எஸ்.டி. நிலுவைத் தொகையை பெற்றுத் தரலாம். எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுவதற்கு இரண்டாவது செங்கல்லை வாங்கித் தரலாம். புதிய ரயில்வே திட்டங்களைப் பெற்றுத் தரலாம்.
மாநில ஆட்சிக்கும் மத்திய அரசுக்கும் பாலமாக இருக்கலாம். ஆனால் அது எதையும் ஆளுநர் ஆர்.என்.இரவி செய்யத் தயாராக இல்லை. அதற்கான எந்த முயற்சிகளிலும் ஈடுபடவில்லை.
தினந்தோறும் யாரையாவது கூட்டி வைத்துக் கொண்டு வகுப்பு எடுக்கிறார். வகுப்பு எடுக்கட்டும். தவறில்லை. அதில் மொத்தமும் தவறான பாடங்களைச் சொல்லித் தந்து கொண்டு இருக்கிறார்.
பிரிட்டிஷ் ஆட்சி மீது தனது கோபத்தை இன்னமும் காட்டிக் கொண்டு இருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சியால் உருவாக்கப்பட்ட பதவிதான் ஆளுநர் என்பதாகும். அதில் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்டதுதான் ஐபிஎஸ் அந்த வேலையில் தான் அவர் இருந்தும் இருக்கிறார்.
‘அனைவர்க்கும் பொதுவான சட்டத்தை’ பிரிட்டிஷ் ஆட்சி உருவாக்கிவிட்டது. அதுதான் இவர்களுக்கு இருக்கும் கோபம் ஆகும். வர்ணத்தையும், சனாதனத்தையும் ஆதரித்து அவர் பேசி வருவதே அத்துமீறல் தான்.
தமிழ்நாடும் வளர்கிறது. தமிழர்கள் அனை வரும் வளர்ந்து வருகிறார்கள். இதனைக் காணப் பொருக்கவில்லை. அதன் அடையாளமாகவே ஆளுநர் மாறிவிட்டார்.
மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சியாளர்களுக்கு இணையாகநியமன ஆளுநர் பதவியை உயர்த்திக் காட்டும் தந்திரமாக இவை அனைத்தும் செய்யப்படுகின்றன.
மாநில அரசின் சுருக்கெழுத்து தான் ஆளுநர் என்றும், ஆளுநர் அதனை மறந்துவிட்டு ‘தி கிரேட் டிக்ரேட்டராக’ தன்னை நினைத்துக் கொள்ள வேண்டாம் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி இருந்தார். இதை ஆளுநர் உணர்ந்தாக வேண்டும் என முரசொலி தலையங்கம் கடுமையாக விமர்ச்சித்துள்ளது.