கேஸ் சிலிண்டர் பயன்படுத்துபவர்கள் இந்த மிஸ்டேக்ஸ் மட்டும் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Rupa

நம் தமிழகத்தில் பெரும்பாலான வீடுகளில் சமையல் செய்ய கேஸ் சிலிண்டர் பயன்படுத்தப்படுகிறது.மத்திய அரசின் இலவச கேஸ் இணைப்பு திட்டத்தால் நகர் மற்றும் கிராமபுற மக்கள் பலர் பயனடைந்து வருகின்றனர்.

சமையல் செய்ய சுலபமாக இருப்பதோடு நேரமும் மிச்சம் ஆவதால் இல்லத்தரசிகள் மத்தியில் கேஸ் அடுப்பிற்கு தனி வரவேற்பு இருக்கத் தான் செய்கிறது.இதில் அதிக பயன்கள் இருந்தாலும் பாதுகாப்பாக கையாளவில்லை என்றால் நிச்சயம் உயிருக்கு ஆபத்தை விளைவித்துவடும்.

சமீப காலமாக கேஸ் சிலிண்டர் விபத்துக்கள் ஏற்படுவது அதிகமாக உள்ளது.இதற்கு முக்கிய காரணம் கவனக்குறைவு தான்.அடுப்பை முறையாக பராமரிக்காமை,சிலிண்டர் காலாவதி தேதி,கேஸ் டியூப் மற்றும் ரெகுலேட்டர் காலாவதி தேதி ஆகியவற்றை கவனிக்க தவறுவதால் தான் பெரும் விபத்துகள் ஏற்படுகிறது.

எனவே சிலிண்டர் புக் செய்து வாங்கும் பொழுது ISI முத்திரை இடம் பெற்றிருக்கிறதா என்று கவனிக்க வேண்டும்.அதேபோல் கேஸ் சிலிண்டர் வாங்கும் போது சரியாக சீல் வைக்கப்பட்டுள்ளதா என்று பரிசோதிக்க வேண்டும்.

சிலிண்டர் சரியாக சீல் வைக்கப்படவில்லை என்றால் கேஸ் கசிவு ஏற்பட்டு பயங்கர வெடிப்பு விபத்திற்கு வழிவகுத்துவிடும்.கேஸ் சிலிண்டரில் இருக்கின்ற சுரக்ஷா ஹோஸ் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

மேலும் கேஸ் அடுப்பு,ரெகுலேட்டரை அடிக்கடி சுத்தம் செய்து உபயோகிக்க வேண்டும்.உங்களுக்கு புதிய சிலிண்டரை மாற்ற தெரியவில்லை என்றால் கேஸ் விநியோகம் செய்பவரிடம் மாற்றிக் கொடுக்க சொல்லலாம்.சிலிண்டர் பொறுத்த தெரியவில்லை என்றால் ரிஸ்க் எடுக்க கூடாது.கேஸ் சிலிண்டர் சரியாக பொறுத்தவில்லை என்றால் நிச்சயம் கேஸ் லீக் ஆகி பெரும் விபத்தை ஏற்படுத்திவிடும்.

அதேபோல் சிலிண்டரில் இருந்து கேஸ் லீக்காகிறதா என்பதை அடிக்கடி பரிசோதிக்க வேண்டும்.கேஸ் ஸ்டவ்வில் சமைப்பதற்கு முன்னர் கேஸ் லீக்கேஜ் இருக்கிறதா? சிலிண்டர் சரியாக பொறுத்தப்பட்டிருக்கிறதா என்பதை செக் செய்ய வேண்டும்.