இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!! மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே முந்துங்கள்!!

Photo of author

By CineDesk

இடைநிலை ஆசிரியர் பணிக்கு விண்ணப்பிக்க இதுதான் கடைசி நாள்!! மிஸ் பண்ணிடாதீங்க.. உடனே முந்துங்கள்!!

இடைநிலை ஆசிரியர் பயிற்சிக்கு நேற்று முதல் விண்ணப்பிக்கலாம் என்று சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆசிரியர் பணிக்கு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்து தொடர்ந்து பல்வேறு தேர்வுகளை எழுதி அரசுப் பணிக்காக காத்திருக்கின்றனர். தற்போது அரசு வேலைகள் அனைவருக்கும் தேவைப்படுகிறது. ஆகையால் லட்சக்கணக்கானோர் அரசு வேலைக்கு தயாராகி வருகின்றனர். பலரும் தமிழக அரசு நடத்தும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்து தேர்வுக்காக காத்திருக்கின்றனர். பலரும் தேர்வுகள் எழுதி முடித்து, அதன் முடிவுக்காக காத்திருக்கின்றனர்.

இந்நிலையில், சென்னை மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவன முதல்வர் வெ.உஷாராணி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிவிப்பில், தொடக்கக் கல்வி பட்டய தேர்வுக்கு (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) தனித்தேர்வர்கள் நேற்று முதல், அதாவது மே 9 முதல் 13ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை, ஏற்கனவே தேர்ச்சி பெற்ற சான்றிதழ்கள், தேர்வுக் கட்டணம் மற்றும் இதர கட்டணத்துடன் சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனத்தில் ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தேர்வு கட்டண விவரங்கள்:

ஒரு படத்திற்கு ரூ.50,
மதிப்பெண் சான்றிதழ் கட்டணம் ரூ.100,
பதிவு மற்றும் சேவை கட்டணம் ரூ.15,
ஆன்லைன் பதிவு கட்டணம் ரூ.70.

நிர்ணயிக்கப்பட்ட கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தின் ரூ.1000 கூடுதல் கட்டணம் செலுத்தி மே 15, 16ஆம் தேதிகளில் விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

இந்த இடைநிலை ஆசிரியர் பணிக்கு ஆயிரக்கணக்கானோர் விண்ணப்பிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பித்த அனைவரும் சில தகுதிகளின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

ஆசிரியர் வேலையில் குளறுபடிகள்:

கடந்த ஆண்டுகளில் நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வுகளில் சில தேர்வுகளுக்கான முடிவுகள் வெளியாகவில்லை என்றும் சில தேர்வு முடிவுகளில்  குளறுபடி ஏற்பட்டுள்ளதாகவும் பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இந்த குளறுபடிகள் எல்லாம் கலைக்க வேண்டும் என்றும் ஒரு சிலர் பணம் கொடுத்து ஆசிரியர் பணியை பெறுகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் தடுக்கும் வகையில் தமிழக அரசும், பள்ளிக் கல்வித் துறையும் அதிரடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தமிழக அரசு தொடர்ந்து ஆசிரியர் தேர்வில் ஏற்படும் குளறுபடிகளை தடுக்க வேண்டும் என்றும் உரிய முறையில் ஆசிரியர் தகுதி தேர்வுகளை தொடர்ந்து நடத்த வேண்டும் என்றும் ஆசிரியர் பணிக்கு  காத்திருப்போர் கோரிக்கை விடுத்துள்ளனர்.