தவறவிட்டுவிடாதீர்கள்.. இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் குழந்தைக்கு 2 கோடி கிடைக்கும்!!

0
158
Don't miss out.. Just do this and your child will get 2 crores!!
Don't miss out.. Just do this and your child will get 2 crores!!

தவறவிட்டுவிடாதீர்கள்.. இதை மட்டும் செய்யுங்கள் உங்கள் குழந்தைக்கு 2 கோடி கிடைக்கும்!!

நம் இந்தியாவில் ஒவ்வொரு பெற்றோரும் குழந்தைகள் குறித்து பல எதிர்கால கனவுகளுடன் வாழ்ந்து வருகின்றனர்.குழந்தைகளின் கல்வி,சொந்த வீடு,ஓய்வு காலத்திற்கு பின்னர் சீரான வாழ்க்கை என்று குறுகிய மற்றும் நீண்ட கால டார்கெட் ஒவ்வொருக்கும் இருக்கிறது.சிலர் வங்கியில் முதலீடு செய்கின்றனர்.சிலர் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்கின்றனர்.

ஈக்விட்டி ஃபண்டுகளில் மாதம் ரூ.5000 முதலீடு செய்தால் வருமான வரியை சேமித்து அதிக வருமானத்தை ஈட்ட முடியும்.வருமான வரி சேமிப்பு திட்டங்களில் சிறந்த சாய்ஸ் மியூச்சுவல் ஃபண்ட்.இவை ஒரு பங்குச் சந்தை முதலீடு ஆகும்.சிறந்த நிதி ஆலோசகர் உதவியுடன் சிறந்த ஈக்விட்டி மியூச்சுவல் நிறுவனத்தில் முதலீடு செய்யும் பொழுது அந்த நிறுவனம் பல துறை சார்ந்த பங்குகளில் முதலீடு செய்து அதன் மூலம் கிடைக்கும் லாபத்தினைப் பிரித்தளிக்கும்.இதில் லார்ஜ்கேப்,ஸ்மால்கேப்,மிட்கேப் என்று பல திட்டங்கள் இருக்கிறது.

மும்பையை சேர்ந்த டீனா என்ற தொழிலதிபர் தனது குழந்தையின் கல்வி செலவிற்காக ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்து அதிக வருமானம் ஈட்டியுள்ளார்.2015 ஆம் ஆண்டு டீனாவின் SIP முதலீடு ரூ.5000 ஆக இருந்த நிலையில் தற்பொழுது அதன் மதிப்பு ரூ.35,000 ஆக அதிகரித்திருக்கிறது.

முதலீட்டு காலம் அதிகமாக இருக்கும் போது தான் கூட்டு வட்டியின் வருமானம் அதிகரிக்கும் என்பதை தெரிந்து கொண்ட டீனா தன்னுடைய மகளுக்கு 6 வயது இருக்கும் பொழுது லார்ஜ் ஈக்விட்டி ஃபண்டுகளில் ரூ.5000 SIP-இல் முதலீட்டை தொடங்கி இருக்கிறார்.இந்நிலையில் முதலீட்டின் மூலம் தற்பொழுது சுமார் ரூ.2 கோடி ரூபாய் வரை வருமானம் ஈட்டி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.

ஈக்விட்டி ஃபண்டுகளை பொறுத்தவரை நீண்ட கால இலக்கிற்காக முதலீடு செய்தால் கூட்டு வட்டி வருமானத்தை பெற முடியும்.ஒருவேளை உங்கள் முதலீட்டு காலம் குறைவாக இருந்தால் உங்களுக்கு குறைவான லாபம் மட்டுமே கிடைக்கும்.

ஒருவேளை உங்கள் திட்ட முதலீடு 2,3 ஆண்டுகாலமாக இருந்தால் நீங்கள் ஈக்விட்டி ஃபண்டுகளில் முதலீடு செய்வதை தவிர்க்கலாம்.இதற்கு மாற்றாக வங்கி அல்லது அஞ்சல் அலுவலங்களில் நிரந்தர வைப்பு நிதி(FD) தொடங்கி முதலீடு செய்யலாம்.