இனி காசு கொடுத்து கெமிக்கல் டை வாங்க வேண்டாம்.. தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்கள் போதும்!!

Photo of author

By Rupa

இனி காசு கொடுத்து கெமிக்கல் டை வாங்க வேண்டாம்.. தேங்காய் எண்ணெயை இப்படி யூஸ் பண்ணுங்கள் போதும்!!

முதியவர்களுக்கு தலை நரைப்பது இயல்பான ஒன்று.ஆனால் இன்று இளம் தலைமுறையினர் பலர் இளநரை பாதிப்பால் அவதியடைந்து வருகின்றனர் என்பது கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

தலை முடி வெள்ளையாக மாற முக்கிய காரணம் ஊட்டச்சத்து குறைபாடு.அதற்கு அடுத்து மன அழுத்தம்,போதிய பராமரிப்பின்மை போன்ற காரணங்களால் தலைமுடி வெள்ளையாகிறது.இவ்வாறு கருமை முடி வெள்ளையனால் அதை கருப்பாக மாற்ற சந்தையில் விற்க கூடிய கெமிக்கல் டை ஷாம்புகளை பயன்படுத்துவது தற்பொழுது சாதாரண விஷயமாக மாறிவிட்டது.சிலருக்கு கெமிக்கல் டை ஒற்றுபோகிறது.ஆனால் சிலருக்கு தோல் அலர்ஜி ஏற்பட்டுவிடுறது.

டை அடிப்பதால் ஏற்படும் பக்க விளைவுகள்:

1)கண் நமைச்சல்
2)தலை அரிப்பு
3)முக கொப்பளம்
4)உடலில் கட்டி மற்றும் வீக்கம்
5)கை மற்றும் காலில் அலர்ஜி

டையால் ஏற்பட்ட அலர்ஜியை போக்க கீழ்க்கண்ட வீட்டு வைத்தியத்தை தொடர்ந்து பின்பற்றி வரவும்.

1.தினமும் இரவு தலைக்கு தேங்காய் எண்ணெய் அப்ளை செய்து வந்தால் டையால் ஏற்பட்ட அலர்ஜி நீங்கும்.

2.ஆலிவ் எண்ணெய் ஒரு தேக்கரண்டி மற்றும் தேயிலை மர எண்ணெய் மூன்று தேக்கரண்டி எடுத்து மிக்ஸ் செய்து தலைக்கு பயன்படுத்தி வந்தால் தலை அரிப்பு,நமைச்சல் நீங்கும்.

3.தினமும் இரவு தலைக்கு நல்லெண்ணெய் அப்ளை செய்து மறுநாள் மென்மையான ஷாம்பூ பயன்படுத்தி தலையை அலசினால் டை அடிப்பதால் ஏற்படும் அலர்ஜி சரியாகும்.

4.பத்து புதினா இலைகளை நீரில் போட்டு கொதிக்க வைத்து ஆறிய பின்னர் தலைக்கு அப்ளை செய்து குளித்து வந்தால் டை அடிப்பதால் ஏற்படும் அலர்ஜிக்கு தீர்வு கிடைக்கும்.