காய்ந்த மலர்கள் மற்றும் மேலும் சில பொருட்களை வைத்து வீட்டிலேயே கம்ப்யூட்டர் சாம்பிராணி தயார் செய்வது குறித்து இங்கு விளக்கப்பட்டுள்ளது.
ஹோம் மேட் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயார் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்:
1)காய்ந்த மலர்கள்
2)ஏலக்காய்
3)கிராம்பு
4)பிரியாணி இலை
5)பன்னீர்
6)ஆரஞ்சு பழத் தோல்
7)கற்பூரம்
8)சாம்பிராணி தூள்
செய்முறை விளக்கம்:
முதலில் நன்கு வாசனை நிறைந்த மலர்களை சேகரித்து வெயிலில் நன்றாக காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு பூஜை பொருட்கள் விற்கும் கடையில் பன்னீர்,100 கிராம் சாம்பிராணி தூள்,ஒரு டப்பா கற்பூரத்தை வாங்கிக் கொள்ளவும்.
பிறகு இரண்டு ஆரஞ்சு பழங்களில் தோலை வெயிலில் நன்கு காய வைத்து எடுத்துக் கொள்ளவும்.
பிறகு இரண்டு பிரியாணி இலை,10 ஏலக்காய்,10 கிராம்பு எடுத்து வைத்துக் கொள்ளவும்.இப்பொழுது மிக்சர் ஜாரில் காய வைத்த மலர்கள்,சாம்பிராணி தூள்,கற்பூரம்,பிரியாணி இலை,ஏலக்காய்,கிராம்பு மற்றும் ஆரஞ்சு பழத் தோல் சேர்த்து பவுடர் பதத்திற்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
இதை ஒரு கிண்ணத்தில் கொட்டி சிறிதளவு பன்னீர் சேர்த்து கலந்து விடவும்.பிறகு கடைகளில் விற்கும் கம்ப்யூட்டர் சாம்பிராணி போல் பிடித்து நிழலில் இரண்டு நாட்களுக்கு உலரவிடவும்.அவ்வளவு தான் வாசனை மிகுந்த ஹோம் மேட் கம்ப்யூட்டர் சாம்பிராணி தயார்.இதை ஈரமில்லாத டப்பாவில் போட்டு வைத்து பூஜைக்கு பயன்படுத்தலாம்.