டெங்கு காய்ச்சலால் அவதியா.. இந்த இலையை அரைத்து குடித்தால் இரத்த பிளேட்லெட்டுகளின் எண்ணிக்கை பல மடங்கு அதிகரிக்கும்!!
பருவமழை காலங்களில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகி டெங்கு,மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவும் அபாயம் உள்ளது.தற்பொழுது பெய்து வரும் தொடர் மழை காரணமாக ஏடிஎஸ் கொசுக்களின் உற்பத்தி அதிகமாகி டெங்கு காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது.
ஏடிஎஸ் கொசுக்கள் மனிதர்களை கடிப்பதால் வைரஸ் தொற்றுக்கள் உருவாகி உயிருக்கு ஆபத்தாக மாறுகிறது.
டெங்கு காய்ச்சல் அறிகுறிகள்:
*அதிக காய்ச்சல்
*தலைவலி
*வாந்தி
*உடல் வலி
*தசை வலி
*சருமத்தில் வெடிப்பு
டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டால் அலட்சியம் கொள்ளாமல் மருத்துவரை அணுகுவது நல்லது.டெங்கு காய்ச்சல் பாதிப்பு குணமாக பப்பாளி இலை சாற்றை அருந்தலாம்.
நமது இரத்தத்தில் உள்ள பிளேட்லெட் எண்ணிக்கை குறைவானால் டெங்கு பாதிப்பு கடுமையாகிறது.எனவே இரத்தத்தில் உள்ள பிளேட்லேட் எண்ணிக்கை அதிகமாக பப்பாளி இலை சாறு அருந்தலாம் என்று ஆயுர்வேத நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
பப்பாளி இலை சாறு காய்ச்சலை குறைத்து கல்லீரல் மற்றும் மண்ணீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.
பப்பாளி இலை சாறு தயாரிப்பது எப்படி?
தேவையான பொருட்கள்:-
1)பப்பாளி இலை
2)தண்ணீர்
செய்முறை:-
ஒரு பப்பாளி இலையை தண்ணீரில் சுத்தம் செய்து பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.பிறகு இதை மிக்ஸி ஜாரில் போட்டு ஒரு கிளாஸ் தண்ணீரோ ஊற்றி மைய்ய அரைக்கவும்.
இந்த சாற்றை ஒரு கிளாஸிற்கு வடிகட்டி குடித்து வந்தால் இரத்தத்தில் உள்ள பிளேட்லெட்களின் எண்ணிக்கை அதிகரிக்கும்.
அது மட்டுமின்றி பப்பாளி இலை சாறு அருந்துவதால் கல்லீரல்,மண்ணீரல் தொடர்பான பாதிப்புகள் குணமாகும்.தீராத சளி,இருமல்,ஆஸ்துமா போன்ற சுவாசக் கோளாறுகள் நீங்கும்.உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும்.