கறிவேப்பிலை உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் ஒரு மூலிகை இல்லையாகும்.இந்த கறிவேப்பிலை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் நம் தலைமுடி கருமையாக மாறும்.
தேவையான பொருட்கள்:-
1)கறிவேப்பிலை – நான்கு கொத்து
2)வெள்ளை உளுந்து பருப்பு – இரண்டு தேக்கரண்டி
3)கடலை பருப்பு – இரண்டு தேக்கரண்டி
4)வர மிளகாய் – இரண்டு
5)உப்பு – தேவையான அளவு
6)புளி – ஒரு துண்டு
7)எண்ணெய் – இரண்டு தேக்கரண்டி
8)வெள்ளை சாதம் – ஒரு கப்
செய்முறை விளக்கம்:-
முதலில் அடுப்பில் வாணலி ஒன்றை வைத்து சூடாக்குங்கள்.அடுத்து மூன்று கறிவேப்பிலை கொத்துக்களை உருவி வாணலியில் போட்டு வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் வாணலியில் இரண்டு தேக்கரண்டி அளவிற்கு எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.அடுத்து அதில் வெள்ளை உளுந்து,கடலை பருப்பு,வர மிளகாய் ஆகியவற்றை அதில் போட்டு வறுக்க வேண்டும்.
பிறகு ஒரு துண்டு புளி போட்டு ஒருமுறை வறுத்து அடுப்பை அணைக்க வேண்டும்.இதை ஆறவைத்து மிக்சர் ஜாரில் போட்டு கொரகொரப்பாக அரைக்க வேண்டும்.
அடுத்து அடுப்பில் வாணலி வைத்து ஒரு தேக்கரண்டி எண்ணெய் ஊற்றி சூடாக்க வேண்டும்.பிறகு அதில் கடுகு போட்டு பொரிவிட வேண்டும்.
அடுத்து கறிவேப்பிலை போட்டு வறுக்க வேண்டும்.அதன் பிறகு அரைத்த கறிவேப்பிலை கலவையை அதில் போட்டு வதக்க வேண்டும்.பின்னர் தேவையான அளவு உப்பு போட்டு கலந்துவிட வேண்டும்.
அதன் பிறகு சூடான சாதத்தை அதில் கொட்டி கிளற வேண்டும்.தேவைப்பட்டால் சிறிதளவு எண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளலாம்.இந்த கறிவேப்பிலை சாதத்தை சாப்பிட்டு வந்தால் முடி வளர்ச்சி நன்றாக இருக்கும்.