ADMK: அதிமுகவுடன் கடந்த தேர்தலில் கைகோர்த்து நின்ற புதிய தமிழகம் வரும் நாட்களில் கூட்டணியில் இருக்க மாட்டோம் என்பதை அதிகாரப்பூர்வமாகவே அறிவித்துவிட்டனர். விஜய் கட்சி தொடங்கி ஆட்சி அதிகாரத்தில் பங்கு தருகிறோம் என்ற அறிவிப்பை எப்பொழுது வெளியிட்டாரோ அப்போதையிலிருந்து மாற்று கட்சியினருக்கு பிரஷர் ஏற தொடங்கிவிட்டது. ஏனென்றால் பலரும் இதே போல தங்களுக்கும் கூட்டணியில் பங்கு வேண்டும் என கேட்க ஆரம்பித்து விட்டனர்.
அதையே பாலோ செய்த பாஜக, தங்களுக்கும் கூட்டணி அதிகாரத்தில் பங்கு உள்ளது என தெரிவித்தது. ஆனால் அதற்கு எதிராக எடப்பாடி, NDA கூட்டணி வெற்றி பெற்றாலும் தாங்கள்தான் ஆட்சி அதிகாரத்தில் இருப்போம் எனக் கூறினார். இந்த ஆட்சி அதிகார மோதல் காரணமாகவே புதிய தமிழகம் அதிமுக கூட்டணியிலிருந்து விலகுவதாக தெரிவித்துவிட்டது. நாளடைவில் யாருடன் கூட்டணி வைக்கப் போகிறோம் என்பதையும் தெரிவிக்கவில்லை.
ஆனால் புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி ஆதரவானது அதிமுகவை விட்டு வெளியேறியதிலிருந்து விஜய் பக்கம் சாய்ந்துள்ளது. தற்போது பேட்டியளிக்கையில் கூட நாங்கள் இன்னும் அதிமுக கூட்டணியில் உள்ளோமா என்று கேள்வி எழுப்பியதோடு?? விஜய்யின் மாநாடு குறித்து பாராட்டியுள்ளார். அதேபோல கடந்த பொது நிகழ்ச்சி ஒன்றில் எங்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு தரும் கூட்டணி தான் வேண்டும் என்றும் கூறினார்.
அப்படி பார்க்கையில் இதற்கு விஜய் தான் சரியான நபர் இவர்களின் கூட்டணி வரும் காலங்களில் அவருடன் தான் இருக்கும் என கூறி வருகின்றனர்.