வீட்டில் காசு தங்க மாட்டேங்குதா? உடனே பெருக்கும் துடைப்பம் எந்த திசையில் இருக்குதுன்னு செக் பண்ணுங்க!!

0
85
Don't want to keep money at home? Immediately check the direction of the magnifying glass!!
Version 1.0.0

இன்று அனைவரும் சந்திக்கும் ஒரு பெரும் பிரச்சனை பணப்பிரச்சனை தான்.எவ்வளவு சம்பாதித்தாலும் கையில் ஒரு பைசா தங்கவில்லை என்பது பலரின் கவலை.இன்றைய காலகட்டத்தில் பணம் தான் அனைத்தையும் தீர்மானிக்கிறது.உங்களை இந்த சமுதாயத்தில் உயர்த்தி காட்டுவது உங்கள் பணம் மட்டுமே.

பிறர் உங்களை மதிக்க நல்ல வேலை மற்றும் கை நிறைய சம்பளம் இருக்க வேண்டியது இக்காலத்தில் அவசியமானவையாகும்.என்னதான் பார்த்து பார்த்து செலவு செய்தாலும் மாத இறுதியில் காசு இல்லாமல் தவிக்க வேண்டிய நிலையில் தான் அனைவரும் உள்ளோம்.உழைப்பிற்கு ஏற்ற ஊதியம் கிடைப்பதில்லை என்பது மறுக்க முடியாத உண்மை.

இருப்பினும் வருகின்ற வருமானத்தை கொண்டு செலவு மற்றும் சேமிப்பை திட்டமிட்டு செய்ய வேண்டும்.சிலரால் என்னதான் பணத்தை கவனமாக செலவு செய்தாலும் இறுதியாக அதை சேமிக்க முடிவதில்லை என்பது அவர்களின் குமுறலாக இருக்கிறது.

இதற்கு நாம் செய்யும் சில தவறுகளும் காரணமாக இருக்கக் கூடும்.நாம் செய்யும் சில ஆன்மீக தவறுகளால் காசு கையை விட்டு நழுவுகிறது.வீட்டில் உடைந்த பொருட்களை சேர்த்து வைத்திருப்பது,கிழிந்த துணிகளை வைத்திருப்பது,எதிர்மறை ஆற்றலை அதிகரிக்கும் பொருட்களை வைத்திருப்பதால் வீட்டில் பணம் தங்குவது தடைபடுகிறது.

அதேபோல் சில பொருட்களை வாஸ்து சாஸ்திரப்படி வைக்க வேண்டியது முக்கியம்.குறிப்பாக வீட்டை சுத்தம் செய்ய பயன்படுத்தும் துடைப்பத்தை வாஸ்து சாஸ்திரப்படி வைக்க வேண்டும்.துடைப்பம் லட்சுமி தாயாரின் உருவமாக பார்க்கப்படுகிறது.சாஸ்திரப்படி துடைப்பத்தை தென்மேற்கு அல்லது மேற்கு திசையில் வைக்க வேண்டும்.
இந்த திசையில் வைத்தால் பண தங்கு தடையின்றி வரும்.

உடைந்த துடைப்பம் வீட்டில் இருந்தால் அதை உடனடியாக அப்புறப்படுத்திவிடவும்.சாஸ்திரப்படி திங்கட்கிழமையில் துடைப்பம் வாங்கக் கூடாது.அமாவாசை,செவ்வாய்,ஞாயிறு மற்றும் சனிக்கிழமை துடைப்பம் வாங்க உகந்த நாட்களாகும்.

Previous article“பிரதான் மந்திரி ஜன் ஆரோக்கிய யோஜனா” திட்டத்தால் தமிழக மக்களுக்குப் பயனில்லை! சுகாதார சீர்திருத்த திட்ட இயக்குனர் தகவல்!
Next articleகஷ்டங்கள் கர்ம வினைகள் தீர.. கார்த்திகை மாதத்தில் இந்த தானம் தவறாமல் செய்யுங்கள்!!