தற்பொழுது முடி உதிர்தல் பிரச்சனையை பலரும் சந்தித்து வருகின்றனர்.மன அழுத்தம்,தூக்கமின்மை,ஊட்டச்சத்து குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் முடி உதிர்வு பிரச்சனை ஏற்படுகிறது.எனவே முடி வளர்ச்சியை அதிகரிக்க நாம் உணவுப்பழக்க வழக்கங்களில் கவனம் செலுத்த வேண்டும்.
முடி வளர்ச்சியை அதிகரிக்கும் ஆரோக்கிய உணவுகள:
1)பாதாம் விதை
2)பூசணி விதை
3)ஆளிவிதை
4)வெள்ளரி விதை
5)வால்நட்
6)கொண்டைக்கடலை
7)முட்டை
8)மீன்
9)கீரை
10)ஆட்டு ஈரல்
இந்த பத்து உணவுகளை சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.பாதாம் விதையில் உள்ள ஊட்டச்சத்துக்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்கும்.ஆளிவிதையை தண்ணீரில் கொதிக்க வைத்து ஜெல் பதத்திற்கு வந்ததும் அதை ஆறவைத்து தலைக்கு தடவி குளித்தால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
மீனில் உள்ள ஒமேகா 3 கொழுப்பு அமிலம் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.கீரையில் இருக்கின்ற வைட்டமின்கள் முடி வளர்ச்சியை அதிகரிக்க உதவுகிறது.பூசணி விதை,வெள்ளரி விதை,வால்நட் போன்றவற்றை ஊறவைத்து சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.புரத உணவுகளை உட்கொண்டால் முடி உதிர்வு குறையும்.
வைட்டமின் ஈ,ஒமேகா 3 கொழுப்பு அமில உணவுகளை உட்கொண்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.இரும்புச்சத்து நிறைந்த முருங்கை கீரையை உட்கொண்டால் முடி உதிர்தல் குணமாகும்.கறிவேப்பிலையை பொடித்து சாப்பிட்டால் நன்றாக முடி வளரும்.பீட்ரூட்,கேரட் போன்ற காய்களை நறுக்கி ஜூஸாக அரைத்து சாப்பிட்டால் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
வைட்டமின் பி12,துத்தநாக உணவுகள்,செலினியம் சத்து நிறைந்த உணவுகள் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.ஒமேகா கொழுப்பு அமில உணவுகள் முடி உதிர்வை கட்டுப்படுத்தும்.ஆட்டு ஈரல்,ஆட்டிறைச்சி போன்றவற்றை சாப்பிட்டு வந்தால் தலைமுடி வளர்ச்சி அதிகரிக்கும்.தலைமுடி வலிமை அதிகரிக்க புரதம் நிறைந்த உணவுகளை உட்கொள்ளலாம்.