தோல் சுருக்கமா,பருக்களா கவலையே வேண்டாம்!!மாதுளை மாஸ்க் போதும்!!

Photo of author

By Parthipan K

தோல் சுருக்கமா,பருக்களா கவலையே வேண்டாம்!!மாதுளை மாஸ்க் போதும்!!

Parthipan K

Updated on:

தோல் சுருக்கமா,பருக்களா கவலையே வேண்டாம்!!மாதுளை மாஸ்க் போதும்!!

மாதுளம் பழத்தை சாப்பிடுவதால் ஹீமோகுளோபின் அதிகரிக்கம்,இதில் உடலிற்கு தேவையான எல்லா ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும். இதனை சாப்பிடுவதால் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பதுடன் சரும பிரச்சனையை தீர்க்கும்.

அத்துடன் முக்கியமாக சருமத்தை புத்துணர்ச்சி பெறச் செய்கிறது. இதனை சருமத்திற்கு வெளியே பயன்படுத்துவதால் கொலாஜன் உருவாக்கத்தை அதிகரிப்பதன் மூலம் சருமத்தை மிருதுவாக்கும்.

அதுமட்டுமின்றி, தோல் சுருக்கம் சூரியக் கதிர்களின் பாதிப்பு போன்றவற்றில் இருந்து சருமத்தை பாதுகாக்கிறது.

மாதுளை பழம் சரும பயன்கள்:

1. சரும பொலிவிற்குஉதவும்

இதிலுள்ள விட்டமின்கள் சருமத்திற்கு புத்துணர்ச்சியையும் புதுப்பொலிவையும் பெற்றுத்தரும்.

தேவையானவை:

1.மாதுளம்பழம்

2.கப் நீர்

பயன்படுத்தும் முறை:

மாதுளம் பழத்தை வெட்டி எடுத்து, அதில் நீர் சேர்த்து பசையாக அரைத்துக் கொள்ளவும். அதனை முகம், கழுத்துகளில் தடவி 15 நிமிடங்களின் பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும்.

2. பிரகாசமான சருமத்தை பெற

சருமத்தில் உள்ள கரும்புள்ளிகள், நிறத் திட்டுக்கள் என்பவற்றை நீக்கி பிரகாசமான சருமத்தை பெறுவதற்கு இந்த முகப்பூச்சினை வாரத்தில் ஒரு தடவை என பயன்படுத்தல் சிறந்தது.

தேவையானவை

1 மாதுளம் பழம்

3 ஸ்பூன் தயிர்

பயன்படுத்தும் முறை:

பழுத்த மாதுளம்பழத்தை எடுத்து சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதனை அரைத்து அதில் தயிர் சேர்த்து பசையாக எடுத்துக் கொள்ளவும். அதனை முகத்தில் தடவி 15 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.

3. முகப்பருக்களை நீக்குதல்:

மாதுளம் பழமுகப் பூச்சினை வாரத்தில் இரண்டு தடவை பயன்படுத்துவது சிறந்த பலனை தரும்.

தேவையானவை:

மாதுளம் பழம்

1 ஸ்பூன் தேன்

ஸ்பூன் எலுமிச்சை சாறு

பயன்படுத்தும் முறை:

மாதுளம்பழத்தை அரைத்து பசையாக எடுத்துக் கொள்ளவும். அதில் தேன், எலுமிச்சை சாறு சேர்த்து முகத்தில் தடவி 20 நிமிடங்களின் பின் நீரினால் கழுவவும்.