அடுக்கு மொழியில் வசனங்கள் பேசுவது மட்டுமல்லாது தன்னுடைய பாடல்களிலும் எதுகை மோனைகளை பயன்படுத்தி அதிக அளவு அடுக்கு மொழி பேசக் கூடியவராகவும் தன்னுடைய தனித்திறமைகளாக இசையமைப்பாளர் பாடல் ஆசிரியர் இயக்குனர் தயாரிப்பாளர் என சினிமா துறையின் முக்கிய இடங்களில் தடம் பதித்த டி ராஜேந்திரன் அவர்கள் நடிகராக தடம் பதித்ததற்கு பின் ஒரு சுவாரசியமான மற்றும் அவருக்கு வருத்தமளிக்கக்கூடிய கதை ஒன்று உள்ளது.
டி ராஜேந்திரன் அவர்கள் ரஜினி அவர்களை மனதில் நினைத்து எழுதிய கதை தான் உயிர் உள்ளவரை உஷா. இந்த திரைப்படத்திற்கு டி ராஜேந்திரன் அவர்கள் தன்னுடைய காதல் மனைவியின் பெயரை வைத்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினியை நினைத்து எழுதப்பட்ட கதை என்பதால் இத்திரைப்படத்தில் நடிப்பதற்காக ரஜினியிடம் பலமுறை சென்று கதையை கூறியிருக்கிறார். கதையைக் கேட்டு விருப்பம் உள்ளது இல்லை என நேரடியாக கூறாமல் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் டி ராஜேந்திரன் அவர்களை அலையவிட்டு இருக்கிறார். பல நாட்களுக்குப் பின்பு எனக்கு நிறைய படங்களில் நடிக்க வேலை இருப்பதால் நீங்கள் வேறு ஒரு ஹீரோவை பார்த்துக் கொள்ளுங்கள் என்பதுபோல கூறி தட்டிக் கழித்திருக்கிறார்.
இதனால் கோபமடைந்தால் டி ராஜேந்திரன் அவர்கள் இத்திரைப்படத்தில் நானே நடிக்கிறேன் என முடிவு செய்த முதன் முதலில் நடிப்பதற்காக களமிறங்கிய படம் தான் உயிருள்ளவரை உஷா. இந்த திரைப்படத்தில் இவர் நடிகராக இயக்குனராக மட்டுமல்லாது தயாரிப்பாளராகவும் இருந்திருக்கிறார். பெண்களை தொடாமல் நடிப்பதில் இவரை இன்றுவரை யாராலும் முந்திச் செல்ல முடியவில்லை.