ரேஷன் கார்டு தொலைந்தால் கவலை வேண்டாம்!! அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

0
184
Don't worry if your ration card is lost!! Super announcement released by Minister Chakrapani!!
Don't worry if your ration card is lost!! Super announcement released by Minister Chakrapani!!

ரேஷன் கார்டு தொலைந்தால் கவலை வேண்டாம்!! அமைச்சர் சக்கரபாணி வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

இந்த மாதத்தின் இறுதிக்குள் ரேஷன் கடைகளில் முக்கியமான மாற்றத்தை கொண்டுவரப் போவதாக அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். இந்த மாதம் முதல் தமிழக ரேஷன் கடைகளில் கியூ ஆர் கோடு முறை நடைமுறை செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் தற்போது சில இடங்களில் மட்டும் கியூ ஆர் கோடு மூலம் பொருள்களை வாங்கும் நடைமுறை இருந்து வருகின்றது. இதையடுத்து அமைச்சர் சக்கரபாணி அவர்கள் இந்த மாதத்தின் இறுதிக்குள் தமிழகத்தில் இருக்கும் அனைத்து ரேஷன் கடைகளிலும் இந்த முறை நடைமுறைப்படுத்தப்படும் என்று அறிவித்துள்ளார்.

அதுமட்டுமில்லாமல் ரேஷன் கார்டுகளை தொலைத்துவிட்டு அவதிப்படும் மக்களுக்கும் ஒரு நல்ல செய்தியை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அதாவது இனி ரேஷன் கார்டு தொலைத்தவர்களுக்கு ஆன்லைன் மூலமாக ரேஷன் கார்டு வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

மேலும் அமைச்சர் சக்கரபாணி அவர்கள் தமிழகத்தில் திமுக அரசின் ஆட்சி என்பதால் தமிழகத்திற்கான மண்ணெண்ணெய் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்துள்ளது என்று மத்திய அரசை குற்றம் சாட்டியுள்ளார்.

Previous articleசருமப் பிரச்சனைகளை தீர்க்க புன்னை எண்ணெயா!!இதோ பாருங்கள்!!
Next articleசென்னைக்கு எதிரான ஐ.பி.எல் போட்டி!! ரோஹித் சர்மா படைத்த மோசமான சாதனை!!