சருமப் பிரச்சனைகளை தீர்க்க புன்னை எண்ணெயா!!இதோ பாருங்கள்!!

0
183
#image_title

சருமப் பிரச்சனைகளை தீர்க்க புன்னை எண்ணெயா!!இதோ பாருங்கள்!!

புங்க அல்லது புன்னை எண்ணெய் பல்வேறு மருத்துவ குணங்கள் நிறைந்து காணப்படுகிறது. இந்த எண்ணையை கோயில்களில் தீபம் ஏற்றப்படும் எண்ணெய்யாகவும் பயன்படுத்தி வருகின்றனர். புன்னை எண்ணை ஆங்கிலத்தில் ‘Tamunu oil’ என அழைக்கபடுகிறது. இந்த எண்ணை முகப்பொலிவிற்கு எவ்வாறு உதவுகிறது என்பதை பற்றி பார்க்கலாம்.

புங்க எண்ணெய் சரும நோய்களையும் தீர்க்கக் கூடியது. இந்த எண்ணெய் மூல உபத்திரத்திற்கு சிறந்த மருந்தாகும். மார்புச் சளி, தீர இருமலுக்கு புங்க எண்ணெய் பயன்படுகிறது. சரும நோய்களுக்கும், ஆறாத புண்களுக்கும், கீழ்வாதத்திற்கும் புங்க எண்ணெய் பயன்படுகிறது.

தினமும் உடலில் புங்க எண்ணெயைத் தடவி வந்தால் சரும நோய்கள் ஏற்படாது. புங்க எண்ணெய்யை பயன்படுத்தி சோரியாஸிஸ்சுக்கான மருந்து தயாரிக்கப்படுகிறது.

முகச்சுருக்கங்களை நீக்குவதிலும் வரவிடாமல் தடுப்பதிலும் புன்னை எண்ணெய் சிறந்த பலன் தரும்.

இந்த மரத்தின் வேர் மூலம் செய்யப்படும் கஷாயத்தை கொண்டு, குடற்புண், கட்டிகள், கண்நோய் போன்றவற்றை குணப்படுத்தலாம்

புங்க விதையில் உள்ள பருப்பு தோலில் ஏற்படும் புண், கரப்பான், அலர்ஜி இவற்றைப் போக்கும். இதன் எண்ணெய் வெப்பக் கட்டியைத் தடுக்கும். கண் நோய்களைக் குணப்படுத்தும்

புன்னை மரமானது பண்டைய காலத்தொட்டே தமிழர்களின் பண்பாடு மற்றும் கலாச்சாரத்தில் இங்கு இருக்கக்கூடிய ஒரு பழமையான மரமாகும். இந்த புன்னை மரத்தின் முக்கியத்துவத்தை தெரிந்த நம் முன்னோர்கள் கோயில்களின் முற்றத்தில் இம்மரத்தை வளர்ப்பதை பாரம்பரியமாக கொண்டிருந்தனர். இதில் உருவாக்கப்படும் எண்ணையை பயன்படுத்தி முகத்தில் உள்ள கருமை, முகத்தில் உள்ள பருக்கள், முகத்தில் உள்ள காயங்கள், அனைத்து பிரச்சினைகளையும் சரி செய்து கொள்ளலாம்.

author avatar
Selvarani