ஆண்,பெண் அனைவரும் தங்களை இளமையாக வைத்துக் கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர்.இருப்பினும் தோல் சுருக்கத்தால் வயது முதுமை வெளியில் தெரிந்துவிடுகிறது.சிலரால் மட்டுமே தங்கள் முதுமையை தள்ளிப்போட முடிகிறது.
கடந்த காலங்களை விட தற்பொழுது கெமிக்கல் அழகு சாதன பொருட்கள் பயன்பாடு அதிகரித்துவிட்டதால் சருமம் சார்ந்த பிரச்சனைகளை பலரும் சந்திதிக்கின்றனர்.தங்களை அழகுபடுத்திக் கொள்ள பயன்படுத்தும் கெமிக்கல் பொருட்கள் பக்கவிளைவுகளை ஏற்படுத்தக் கூடியவை ஆகும்.இதனால் இளம் வயதிலேயே தோல் சுருக்கம் ஏற்பட்டு முதுமை எட்டி பார்க்கத் தொடங்கிவிடுகிறது.
எனவே உங்கள் சருமம் என்றும் இளமையாக தெரிய விளக்கெண்ணெயை பயன்படுத்துங்கள்.இதில் வைட்டமின் ஈ,ஒமேகா 6 கொழுப்பு அமிலம்,ஒமேகா 9 கொழுப்பு அமிலம்,நிறைவுற்ற கொழுப்பு அமிலங்கள் நிறைந்து காணப்படுகிறது.தினமும் ஒரு தேக்கரண்டி விளக்கெண்ணெயை சருமத்தில் அப்ளை செய்தால் சருமம் ஈரப்பதத்துடன் இருக்கும்.
விளக்கெண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறை ஒன்றாக மிக்ஸ் செய்து சருமத்தில் அப்ளை செய்தால் பொலிவு அதிகரிக்கும்.விளக்கெண்ணெயுடன் கற்றாழை ஜெல் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்தால் சருமத்தில் ஈரப்பதம் தக்கவைக்கப்படும்.
விளக்கெண்ணெயில் மஞ்சள் தூள் சேர்த்து முகத்திற்கு அப்ளை செய்து குளித்தால் சரும சுருக்கம் ஏற்படுவது கட்டுப்படும்.விளக்கெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெயை ஒன்றாக மிக்ஸ் செய்து சருமத்தில் அப்ளை செய்து வந்தால் சுருக்கம் நீங்கும்.
சருமத்திற்கு அடிக்கடி விளக்கெண்ணெய் பயன்படுத்தி வந்தால் தோல் சுருக்கம் ஏற்படுவது கட்டுப்படும்.புருவங்கள் மற்றும் கண் இமைகள் மீது விளக்கெண்ணெய் அப்ளை செய்து வந்தால் கண் எரிச்சல் நீங்கும்.
விளக்கெண்ணெயுடன் வைட்டமின் ஈ மாத்திரை சேர்த்து முகத்தில் அப்ளை செய்து வந்தால் முதுமையை தள்ளிப்போடலாம்.முகத்திற்கு விளக்கெண்ணய் அப்ளை செய்வதால் கரும்புள்ளிகள்,பருக்கள்,கருவளையம் போன்றவை மறைந்துவிடும்.எனவே தினமும் சிறிதளவு விளக்கெண்ணயை முகத்திற்கு அப்ளை செய்வதை வழக்கமாக்கி கொள்ளுங்கள்.