வக்கீல் யாரு அட்வகேட் யாருன்னு தெரியாம இருக்கீங்களா? இனிமேல் தெரிஞ்சுக்கோங்க!

0
1623
Lawyer and advocate difference in tamil
Lawyer and advocate difference in tamil

வக்கீல் யாரு அட்வகேட் யாருன்னு தெரியாம இருக்கீங்களா? இனிமேல் தெரிஞ்சுக்கோங்க!

உங்களுக்கு ஏதாவது ஒரு தேவை காரணமாக நீங்கள் கோர்ட்டிற்கு செல்கிறீர்கள் என்றால் முதலில் ஒரு வழக்கறிஞரை அணுக வேண்டும். இன்றைய காலகட்டத்தில் சில பொய்யான வழக்கறிஞர்களும் உள்ளனர் அவர்கள் தங்களை வழக்குரைஞர் என்று போலித்தனமாக நம்ப வைப்பார்கள். அதற்கு முதலில் நீங்கள் உண்மையான வழக்கறிஞர் யார் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

முதலில் நீங்கள் லாயர் மற்றும் அட்வகேட் இவை இரண்டும் ஒன்று என்று நினைத்திருந்தால் அது முற்றிலும் தவறு இது இரண்டிற்கும் உள்ள வேற்றுமை(lawyer and advocate difference in tamil) தன்மையை அறியலாம்.

சட்டத்தை படித்து முடித்தபவர்களை லாயர்(lawyer meaning in tamil) என்பார்கள் அதாவது வழக்கறிஞர் சட்டங்களை பற்றி அறிந்தவர்கள்(advocate meaning in tamil) என்று அர்த்தம்.

அதிலும் சட்டத்தை படித்த பின்பு வழக்கறிஞர் சபை சென்று ரெஜிஸ்டர் செய்து ஒரு கேசில் சம்பந்தப்பட்ட நபர்களை விட்டு மூன்றாவது ஆக தனது பாதங்களை எடுத்து வைத்து கோர்ட்டில் வாதாடுபவர்களை தான் வழக்குரைஞர் என்பார்கள் அதாவது அட்வகேட் என்று கூறுவார்கள்.

இன்றைய காலகட்டத்தில் பேச்சு வழக்கில் லாயர், வழக்கறிஞர், அட்வகேட் என்று அனைத்தையும் ஒன்று என்று நினைத்துக் கொண்டு உள்ளோம்.

வக்கீல்களுக்கு உண்டான உதவித்தொகையை பெறுவதற்கு சில வழிமுறைகள் உள்ளன.(how to get welfare fund for lawyers in tamil)

முதலில் பார் கவுன்சிலில் ரிஜிஸ்டர் செய்து விட வேண்டும் இதற்கான கட்டணமாக ரூ14,100 செலுத்த வேண்டும்.

தேசிய அளவிலான வழக்கறிஞர் குழும தேர்வு கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சீனியர் அட்வகேட்டிடம் மூன்று வருடங்கள் பணி புரிய வேண்டும் இதிலும் கட்டாயமாக உங்களுக்கு 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.

இப்படி இருந்தால் மட்டும்தான் வக்கீல் உதவித்தொகை ரூ 3000 உதவித்தொகை இரண்டு வருடங்களுக்கு கிடைக்கும்.

இதனை விண்ணப்பித்த நாளிலிருந்து கொடுத்தால் நன்றாக இருக்கும் என்று சில இளம் வழக்கறிஞர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சீனியர் வழக்கறிஞர்கள் ஜூனியர் வழக்கறிஞர்களை எந்தவித இழிவுகளும் இங்கு நடத்த வேண்டும் என்றும் அவர்களுக்கான பணி புரியும் தொகையை கட்டாயம் கொடுக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்கள் தங்களின் தேவைக்காக அட்வகேட்டை தேடி செல்கின்றனர் அப்படி இருக்கும் அவர்கள் பொய்யானவர்களா அல்லது உண்மையானவர்களா என்று மிகவும் எளிமையாக அறிந்து கொள்ளலாம். நீங்கள் தேடி செல்லும் அட்வகேட்டிடம் எப்படியாவது அவர்களின் enrollment number யை வாங்கி விடுங்கள். இதனை bctnpy.org என்ற தமிழ்நாடு பார் கவுன்சிலர் என்ற இணையதளத்தில் அட்வகேட் சர்ச்சில் அவரது நம்பரை கொடுக்கவும்.

அவர் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அட்வகேட் என்றால் அவரது முழு விவரங்களும் தமிழ்நாடு பார் கவுன்சிலரில் ரிஜிஸ்டர் செய்யப்பட்டிருக்கும் இல்லையென்றால் அவர் பொய்யானவர் என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம்.

Previous articleஏப்பம் அடிக்கடி வருகிறதா இதை செய்யுங்கள்!! இந்த ஒரு தண்ணீர் போதும் உடனே நிறுத்திவிடும்!!
Next articleபேன் கார்டு ஜெராக்ஸ் கூட பத்திரமா வெச்சுக்கோங்க!! வங்கி பற்றிய முழு விவரத்தையும் இந்த ஒரு நகல் சொல்லிவிடும்!!