இந்திய அணி இங்கிலாந்து சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடரை விளையாடி வருகிறது. ரோஹித் ஷர்மா, விராட் கோஹ்லி போன்ற முன்னணி வீரர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டதால் இந்த தொடரில் இந்தியா மீதிருந்த எதிர்பார்ப்பு ரசிகளிர்களிடையே இல்லாமல் போய்விட்டது.
அதற்கு ஏற்றார் போல் முதல் டெஸ்ட் போட்டியில் கையில் இருந்த ஆட்டத்தை இங்கிலாந்துக்கு தாரை வார்த்ததை போல இந்திய அணி முதல் டெஸ்டில் தோல்வி அடைந்தது. இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான அணியில் பும்ராவுக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. பும்ரா ஏற்கனவே தன்னால் இந்த தொடரில் மொத்தம் 3 டெஸ்ட் தான் விளையாட முடியும் என சொல்லி இருந்தார்.
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் அணித்தேர்வை கடுமையாக விமர்சித்துள்ளார். லார்ட்ஸில் நடக்கும் போட்டிக்காக பும்ராவுக்கு ஓய்வு கொடுத்துள்ளீர்கள். பும்ரா போன்ற முன்னணி வீரர் இல்லாத நேரத்தில் குல்தீப் யாதவ் போன்ற அனுபவம் வாய்ந்த வீரரை எடுக்காமல் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு கொடுத்துள்ளது அதிர்ச்சியாக உள்ளது. இந்திய கிரிக்கெட் கமிட்டியின் இந்த தேர்வு எனக்கு குழப்பமாக உள்ளது என்று பேட்டி கொடுத்துள்ளார் சுனில் கவாஸ்கர்.
அதேபோல முன்னாள் வீரர் ரவி சாஸ்திரி அளித்த பேட்டியில் ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் இந்திய இங்கிலாந்தை விட பின் தங்கிய நிலையில் இருக்கிறது. முதல் டெஸ்டுக்கும், இரண்டாவது டெஸ்டுக்கும் 7 நாட்கள் இடைவெளி உள்ளது. இந்த 7 நாள் ஓய்வு உங்களுக்கு பத்தலையா பும்ரா என்று காட்டமாக விமர்சித்துள்ளார் ரவி சாஸ்திரி.