மாணவர்களுக்கு டபுள் அக்கவுண்டு.. இவர்களுக்கெல்லாம் இதில் தான் ஊக்கத்தொகை!! தமிழக அரசு திட்டவட்டம்!!

Photo of author

By Rupa

மாணவர்களுக்கு டபுள் அக்கவுண்டு.. இவர்களுக்கெல்லாம் இதில் தான் ஊக்கத்தொகை!! தமிழக அரசு திட்டவட்டம்!!

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு தமிழகஅரசானது பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது.அந்த வகையில் 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஊக்கத்தொகையையும் வழங்குகிறது.குறிப்பாக உயர்கல்வியில் படிக்கும் மாணவர்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டமும் நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்த நலத்திட்டங்கள் கிடைக்க கட்டாயம் அனைத்து மாணவர்களுக்கும் வங்கி கணக்கு இருப்பது அவசியம்.ஆனால் பெரும்பாலான மாணவர்களுக்கு வங்கி கணக்கு என்பது இல்லை.இதனை பூர்த்தி செய்ய தமிழக அரசானது பள்ளி இயக்குனரகம் மற்றும் அஞ்சல் துறையுடன் ஒரு ஒப்பந்தத்தை மேற்கொண்டு பள்ளி மாணவர்களுக்கு வங்கி கணக்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.அதுமட்டுமின்றி ஆதார் அட்டை இல்லாத மாணவர்கள் மேற்கொண்டு வங்கி கணக்குடன் ஆதார் அட்டை இணைத்தல் உள்ளிட்ட பணிகளையும் இதன் மூலம் செய்து கொள்ளலாம்.

அதேபோல ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தனி வங்கிக் கணக்கும், இதுவே ஐந்தாம் வகுப்பிற்கு மேல் படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது பெற்றோருடனான கூட்டு வங்கி கணக்கானது திறக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர்.மேற்கொண்டு வங்கி கணக்கானது ஒவ்வொரு மாணவருக்கும் திறக்கப்படும் பட்சத்தில் அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதனை எமிஸ் தளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர்.

கூட்டு வங்கிக் கணக்கை திறக்க மாணவர்கள் தங்களது ஆதார் அட்டை எண் பெற்றோர்களின் அடையாள அட்டை மற்றும் புகைப்படம் இருந்தால் போதுமானது என்று கூறியுள்ளனர்.