விமான நிலையத்தில் ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு! 75 பேர் பலியான பரிதாபம்!

Photo of author

By Hasini

விமான நிலையத்தில் ஏற்பட்ட இரட்டை குண்டு வெடிப்பு! 75 பேர் பலியான பரிதாபம்!

ஆப்கானிஸ்தானை முழுமையாக தலிபான்கள் தற்போது முழுமையாக கைப்பற்றி உள்ளனர். ஆப்கன் நாட்டிலிருந்து 31-ஆம் தேதிக்குள் அமெரிக்கப் படைகள் முழுவதும் வெளியேறி விடும் என்று ஜோ பைடன் அறிவித்த நிலையில், தலிபான்கள் திடீரென்று காலதாமதமானாலும் பரவாயில்லை என்று கூறினார்கள். தலீபான்கள் கைப்பற்றியதை அடுத்து உலக நாடுகள்  அனைவரும் அவரது நாட்டு மக்களை மெட்டு கொண்டு வருவதில் ஆர்வம் காட்டி வருகின்றன.

இதன் காரணமாக தன் நாட்டு மக்களை வெளியேற்ற அமெரிக்கா, இந்தியா, பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் விமானம் மூலம் மக்களை மீட்டு வருகின்றன. சொந்த நாட்டை விட்டு வெளியேற நினைக்கும் அவர்களை பல நாடுகள் மீட்டு வருகின்றனர். இந்த மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் நடைபெற்று வருகிறது. இதற்காக விமான நிலையத்தின்  உள்ளும், வெளியிலும் பொது மக்கள் திரண்டுள்ளனர்.

அந்த விமான நிலையத்தை அமெரிக்க படைகள் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர்.  இந்நிலையில் காபுல் விமான நிலையத்திற்கு வெளியே நேற்று இரவு இரட்டை வெடிகுண்டு விபத்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலில் 73 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் உயிரிழந்தவர்களில் 13 பேர் அமெரிக்க பாதுகாப்பு படை வீரர்கள் என்றும், மீதி உள்ள 60 பேர் ஆப்கானியர்கள் என்றும் கூறியுள்ளனர். இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இந்த இரட்டை குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. இவர்களுக்கும், தலீபான்களுக்கும் ஏற்கனவே மோதல் போக்கு நிலவுவதால் இந்த குண்டுவெடிப்பு தாக்குதலுக்கு அவர்களும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அதே போல் இந்த சம்பவத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் அவர் இது குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்களை வேட்டையாடுவோம் எனவும் கூறியுள்ளார்.

உலகமே இப்படி ஒரு இக்கட்டான சூழ்நிலையில் உள்ளது. இப்போது, இந்த சூழ்நிலையில் தீவிரவாதிகள் இப்படி ஒரு சதி செயலை அரங்கேற்றி இருப்பது உலக மக்களை அதிருப்தியில் ஆழ்த்தி உள்ளது.