அரசு பெண் ஊழியர்களுக்கு டபுள் டமாக்கா ஆஃபர்!! ஊதியத்துடன் இனி கணவருக்கும் விடுப்பு!!
அரசு பணியில் பணியாற்றி வரும் பெண் ஊழியர்களுக்கு கர்ப்பமானால் ஊதியத்துடன் இனிமேல் கணவருக்கும் ஒரு மாதம் விடுப்பு அளிக்கப்படும் என்று அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
பெண் ஊழியர்களை மகிழ்ச்சியடைய செய்யும் இந்த சலுகையானது சிக்கிம் மாநில அரசால் நிறைவேற்றப்பட உள்ளது.
சிக்கிம் மாநில முதல்வர் பிரேம் சிங்க் தமாங் தெரிவித்துள்ள அறிக்கையில் அரசு ஊழியர்களாக பணிபுரியும் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய ஓராண்டு கால கர்ப்பகால விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதனுடன் கூடவே ஆண்களுக்கும் ஒரு மாதம் பேறுகால விடுப்பு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
சிவில் சங்க சர்வீஸ் அதிகாரிகள் பங்கு பெற்ற ஆண்டு கூட்டத்தில் கலந்து கொண்ட முதல்வர் இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். மேலும் இந்த அறிவிப்பானது வெகு விரைவில் அமலுக்கு வர இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த விடுமுறை காலங்கள் அரசு ஊழியர்கள் தங்கள் குழந்தைகளை மிகவும் சிறப்பாக கவனிக்க உதவும் என்று கூறிய அவர் சட்டத்தில் மகப்பேறு கால நலச்சட்டம் 1961-ன் படி மகளிர்க்கு ஆறு மாத காலம் விடுப்பானது நடைமுறையில் உள்ளது. அதனை தற்போது 12 மாதங்களாக உயர்த்தி அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த அறிவிப்பானது சிக்கிம் மாநில அரசு பெண் ஊழியர்களை மகிழ்ச்சியடைய செய்துள்ளது.
நமது தமிழ்நாட்டிலும் மகப்பேறு கால விடுமுறை ஓராண்டு ஊதியத்துடன் கூடிய விடுமுறையானது அமலில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.