இரண்டு ஹீரோயின்களுடன் கலக்க போகும் சந்தானம்

Photo of author

By Anand

இரண்டு ஹீரோயின்களுடன் கலக்க போகும் சந்தானம்

நடிகர் சந்தானம் நடிக்கும் புதிய படத்தில் அவருடன் இரண்டு ஹீரோயின்கள் ஜோடியாக நடிக்க போகின்றனர்.

மசாலா பிக்ஸ், எம்கேஆர்பி புரொடக்ஷன்ஸ் இணைந்து வழங்கும் புதிய படத்தில் நடிகர் சந்தானம் நாயகனாக நடிக்கவிருக்கிறார். நடிகர் சந்தானம் நடிக்கும் இந்த படத்தினை ஜெயம்கொண்டான், கண்டேன் காதலை, இவன் தந்திரன் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கிய ஆர்.கண்ணன் இயக்கி வருகிறார்.

நடிகர் சந்தானம் நடிக்கவுள்ள இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது சென்னையில் துவங்கி நடைபெற்று வருகிறது. காதல், காமெடி, ஆக்‌ஷன், ஃபேண்டஸி கலந்த கலவையாக இந்த படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் சந்தானத்திற்கு ஜோடியாக தாரா அலிஷா பெர்ரி நடிக்கிறார். இவர் சமீபத்தில் வெளியான ஏ1 படத்தில் நடிகர் சந்தானத்துடன் கதாநாயகியாக நடித்தவர்.

தற்போது மீண்டும் சந்தானத்துடன் இரண்டாம் முறையாக இப்படத்தில் இணைந்து நடிக்கிறார். இந்த படத்தில் இரண்டாவது நாயகியாக சுவாதி முப்பலா அறிமுகமாகிறார். இவர் மிஸ் கர்நாடகா 2017 அழகி பட்டம் வென்றவர். இவர்களுடன் ஆனந்த்ராஜ், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், பரத் ரெட்டி, சிவசங்கர் மாஸ்டர் மற்றும் பல முக்கிய நடிகர்களும் நடிக்கிறார்கள்.

நடிகர் சந்தனம் நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரே கட்டமாக 60 நாட்கள் தொடர்ந்து நடைபெற உள்ளது. இதற்காக ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் 15 நாட்கள் படப்பிடிப்பு நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக மிகப்பெரும் பட்ஜெட்டில் பிரமாண்டமான செட் போடப்பட்டு வருகிறது. வரும் பிப்ரவரி மாதத்தில் இந்த படத்தினை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.