டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளின் தொகுப்பு!

Photo of author

By Parthipan K

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளின் தொகுப்பு!

Parthipan K

டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழிகளின் தொகுப்பு!

இந்தியாவின் தலைசிறந்த விஞ்ஞானி, ஏவுகணை நாயகன், 11வது குடியரசு தலைவர், கனவு காணுங்கள் என்று சொன்னவர் யார்? என்றால் உடனே நம் நினைவுக்கு வருபவர் டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்கள். இந்த “கனவு நாயகனின் பிறந்த தினம்” இன்று, இவரை நினைவுகூறும் விதமாக அவரின் பொன்மொழிகளை ஒரு தொகுப்பாக பார்க்கலாம்.

வாய்ப்புக்காக காத்திருக்காதே!
உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக்கொள்…

“நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம்! ஆனால் இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும்”.

நீ யாராக இருந்தாலும் பரவாயில்லை… நீ எண்ணுவது விண்மீனாக இருந்தாலும் உன் உழைப்பால் நீ எண்ணியது உன்னை வந்து சேரும் நீயாக இரு…

“அழகைப் பற்றி கனவு காணாதீர்கள் அது உங்களின் கடமையை பாழாகிவிடும்… கடமையைப் பற்றி கனவு காணுங்கள் அது உங்கள் வாழ்க்கையை அழகாக்கும்….

“நம்பிக்கை நிறைந்த ஒருவர் யார் முன்னேயும் எப்போதும் மண்டியிடுவது இல்லை…..”

உனது இதயத்தில் நேர்மை இருந்தால் உனது நடத்தையில் அழகு இருக்கும்!
உன் நடத்தையில் அழகு இருந்தால் வீட்டில் அமைதி இருக்கும்!
வீட்டில் அமைதி இருந்தால் நாட்டில் அமைதி நிலைக்கும்! நாட்டில் அமைதி இருந்தால் உலகில் சமாதானம் !

ஒரு முட்டாள் தன்னை முட்டாள் என்று உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான்…..
ஒரு புத்திசாலி தன்னை புத்திசாலி என்ற பெருமை கொள்ளும் கணத்தில் முட்டாள் ஆகின்றான்…

“வாய்ப்புக்காக காத்திருக்காதே… உனக்கான வாய்ப்பை நீயே ஏற்படுத்திக் கொள்…”

“வெல்வோம், சாதிப்போம், வேதனைகளை துடைத்தெறிவோம், எந்தை அருளால் எதுவும் வசமாகும்…”

ஆண்டவன் சோதிப்பது எல்லாரையும் அல்ல, உன்னை போல் சாதிக்க துடிக்கும் புத்திசாலிகளை மட்டுமே…

“வாழ்க்கை என்பது ஒரு சந்தர்ப்பம் நழுவ விடாதீர்கள். ஒரு கடமை- நிறைவேற்றுங்கள்
ஒரு லட்சியம்- சாதியுங்கள் ஒரு சோகம்- தாங்கிக் கொள்ளுங்கள்
ஒரு போராட்டம்- வென்று காட்டுங்கள்
ஒரு பயணம்- நடத்தி முடியுங்கள்…. ”

” வேகம் எதிர்பார்க்காத முடிவினை தரும்…
விவேகம் எதிர்பார்ப்பினை முடிவாய் தரும்…”

பிரச்சனைகளை சகித்துக் கொள்ளாமல் எதிர்கொள்ள துணியுங்கள்…!
பயந்தால் வரலாறு படைக்க முடியாது!