மத்திய மாநில அரசுகளுக்கு அன்புமணி ராமதாஸ் முக்கிய கோரிக்கை!

0
119

2021 ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து பெட்ரோல் டீசல் விலைகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது ஜனவரி மாதம் முதல் சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 86 ரூபாய் 51 காசுக்கும் ஒரு லிட்டர் டீசல் 79 ரூபாய் 21 காசுக்கு விற்பனை செய்யப்பட்டது. மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பெட்ரோல் டீசல் விலையில் பெரிய அளவில் மாற்றம் செய்யப்படவில்லை. ஒரு சில தினங்கள் விலை குறைப்பு செய்யப்பட்டது .ஆனால் மக்கள் கொஞ்சம் நிம்மதியாக இருந்தார்கள். இந்த நிலையில் மே மாத தொடக்கத்தில் இருந்தே இந்த பெட்ரோல் டீசல் விலைகள் மறுபடியும் எகிற தொடங்கிவிட்டது. இந்த வருடத்தின் தொடக்கம் முதல் இன்று வரையில் பெற்றோல் விலை எந்தெந்த ஏழு ரூபாய் 33 காசும் டீசல் 8 ரூபாய் 28 காசும் அதிகரித்திருக்கின்றன.

பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்வை அதோடு மட்டும் நின்று விடாது எரிபொருள் விலை உயர்ந்தால் சரக்கு வாகனங்களின் அழகை அதிகரித்து அத்தியாவசிய பொருட்கள் மற்றும் காய்கறிகள் விலையும் உயரும் அந்த சமயத்தில் மக்கள் போக்குவரத்து செலவும் அதிகமாகும் இவற்றை ஏழை எளிய நடுத்தர மக்களால் தாங்கிக் கொள்ள இயலாது முன்னரே வாழ்வாதார இழப்பால் பாதிக்கப்பட்ட இருக்கின்ற மக்கள் இந்த விலை உயர்வு காரணமாக மேலும் பாதிக்கப்படுவார்கள்.

பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் மீது மத்திய மாநில அரசுகள் மிக அதிக அளவில் வரி வசூல் செய்கின்றன அதன் காரணமாக தான் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 32 ரூபாய் 90 காசுகளும், ஒரு லிட்டர் டீசலுக்கு 31 ரூபாய் என்பது காசுகளும், காலால் வரியாக மத்திய அரசு வசூல் செய்கிறது. தமிழக அரசு பெட்ரோல் விலை 34 சதவீதமும் அதாவது ஒரு லிட்டருக்கு 25 ரூபாய் என்பது காசும் வசூல் செய்கிறது. இவற்றின் மீதான வரிகளை குறைக்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்திருக்கிறார்.

2021 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக தேர்தல் அறிக்கையில் திமுக ஆட்சிக்கு வந்தால் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூபாய் 5 குறைக்கப்படும் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியமாக வழங்கப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்தது. அதை நிறைவேற்றுவதற்கு இதுதான் சரியான நேரம் இந்த வாக்குறுதியை நிறைவேற்றுவது அரசுக்கு பெரிய அளவில் வருவாய் இழப்பு எதுவும் ஏற்பட்டுவிடாது என்று தெரிவித்திருக்கிறார். மாநில அரசின் மதிப்புக்கூட்டு வரியை மத்திய அரசின் கலால் வரி மாநில அரசின் பங்கு போன்றவற்றை இணைத்து தமிழக அரசு இருக்கிற பெட்ரோல் விற்பனை எண்ணிக்கை 37 ரூபாய் 60 காசுகளும் டீசல் விலையில் லிட்டருக்கு 30 ரூபாய் பத்து காசுக்கும் வருவாயாக கிடைக்கிறது. இதில் ஐந்து ரூபாய் குறைப்பது பாதிப்பை ஏற்படுத்தி விடாது கூறியிருக்கிறார்.

அதோடு மட்டுமில்லாமல் கடந்த ஒரு வருடத்தில் பெட்ரோல் டீசல் விலைகள் ஒரு லிட்டருக்கு இருபதிற்கும் மேற்பட்ட அளவில் உயர்ந்து இருக்கும் அதன் மூலம் மட்டுமே தமிழக அரசுக்கு ஒரு லிட்டருக்கு 5 க்கும் அதிகமான கூடுதல் வருமானம் கிடைத்திருக்கும். இதன் காரணமாக தமிழக அரசு வருவாய் பற்றாக்குறை என தெரிவிக்காமல் பெட்ரோல் டீசல் விலை லிட்டருக்கு ரூபாய் 5 குறைக்க வேண்டும் மத்திய அரசும் கலால் வரியை அதே அளவிற்கு குறைக்க முன்வர வேண்டும், தமிழக அரசு கூடுதலாக சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 100 ரூபாய் மானியம் வழங்க வேண்டும் என்று தெரிவித்ததோடு, மக்கள் சுமையை ஓரளவிற்கு இதன் மூலம் குறைக்க முன்வர வேண்டும் தெரிவித்திருக்கிறார் அன்புமணி.

Previous articleவெளுத்து வாங்கப்போகும் மழை விவசாயிகளே உஷார்! வானிலை ஆய்வு மையம்!
Next articleகங்கையில் மிதந்து வரும் சடலங்கள்! வலை அமைத்த பீகார்!