தேசிய அளவில் முதலிடம் பிடித்து டிரெண்டிங் ஆன மருத்துவர் ராமதாஸின் முத்து விழா #தமிழினப்போராளி80
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸின் 80-வது பிறந்த நாள் விழா முத்து விழாவாக இன்று கொண்டாடப்படுகிறது. ராமதாஸுக்கு வாழ்த்து தெரிவிக்கும் #தமிழினப்போராளி80 என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங்கில் முதலிடம் பிடித்துள்ளது.
தமிழகம் மற்றும் இந்திய மக்களால் சமூக நீதி காவலர் என்ற பெருமையுடன் அழைக்கப்படும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், 1980 களில் வன்னியர்களுக்கான இடஒதுக்கீடு கோரும் போராட்டத்தை நடத்தினார். தமிழகத்தையே அதிரவைத்த இந்த இடஒதுக்கீட்டுப் போராட்டத்தில் நடத்தபட்ட துப்பாக்கிச் சூட்டில் 21 பேர் பலியாகினர்.
இதனையடுத்து முதல்வராக கருணாநிதி பதவி வகித்த போது, வன்னியர் உட்பட 108 சாதியினரையும் இணைத்து மிகவும் பிற்படுத்தப்பட்டோர் MBC என்கிற பிரிவில் அனைவரையும் உள்ளடக்கி 20% இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. இது மட்டுமல்லாமல் மேலும் ஈழத் தமிழர் பிரச்சனை,மது விலக்கு,புகையிலை ஒழிப்பு,பெண்களுக்கு எதிரான கொடுமைகள், தமிழர் வாழ்வுரிமை போராட்டம் என பல போராட்டங்களை முன்னெடுத்தவர் மருத்துவர் ராமதாஸ்.
1991-ல் ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட போது தமிழகத்தில் தமிழ்த் தேசியக் குரல்கள் கொடூரமாக ஒடுக்கப்பட்டன. அப்போது துணிச்சலாக தமிழகத்துக்கு தன்னுரிமை கோரி மாநாடு நடத்தினார் மருத்துவர் ராமதாஸ். இவ்வளவு சிறப்பு வாய்ந்த அரசியல் தலைவரான இவர் தான் வாக்குறுதி அளித்தப்படி இன்று வரை சட்டமன்றத்தில் காலெடுத்து வைக்கவில்லை. இவ்வளவு பெருமைக்கும் உரிய அவரது 80-வது பிறந்த நாளை முத்துவிழாவாக பாமகவினர் கொண்டாடி வருகின்றனர்.
மேலும் படிக்க : பாட்டாளி மக்கள் கட்சி ok! இனி No பிஜேபி! அதிமுக அதிரடி!
இந்த விழாவை முன்னிட்டு பமாகவினர் ட்விட்டரில் #தமிழினப்போராளி80 என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி மருத்துவரின் சாதனைகளையும் பெருமைகளையும் பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது சமூக வலைத்தளங்களில் டிரெண்டிங் ஆகி வருகிறது. மேலும் இவ்வாறு பதிவிட்ட பதிவுகள் அகில இந்திய அளவில் முதலிடம் பிடித்துள்ளது. இந்த தலைப்பில் இடம்பெற்ற சில ட்விட்டர் பதிவுகள்.
மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பெருமிதம்
பாமக இளைஞர் அணி செயலாளரும், முன்னாள் மத்திய சுகாதார துறை அமைச்சர் மற்றும் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரான மருத்துவர் அன்புமணி ராமதாஸ் பதிவிட்டுள்ளதாவது:
மருத்துவராக, விவசாயியாக, போராளியாக, தலைவராக, ஆசிரியராக, வழிக்காட்டியாக, மனஉறுதி மிக்க வீரராக, அரசியல் சாணக்கியராக, பிடிவாதக்காரராக, எல்லாவற்றுக்கும் மேல் எனக்கு நல்ல அன்பான கண்டிப்புமிக்க தந்தையாக இன்று முத்துவிழா காணும் மருத்துவர் ஐயாவை பெருமையாக பார்க்கிறேன். ஆறு வயதில் பள்ளி விடுதியில் சேர்த்த கண்டிப்பு மிக்க தந்தையை பார்த்திருக்கிறேன், ஆண்டுதோறும் சுற்றுலா அழைத்து செல்லும் அன்பான அப்பாவை பார்த்திருக்கிறேன், பெரும் போராளியாக சிறையில் பார்த்திருக்கிறேன், ஒரு டாக்டராக மருத்துவமனையில் பார்த்திருக்கிறேன் எனவும் பதிவிட்டுள்ளார் அன்புமணி.
மேலும் படிக்க : திமுக அரசால் சாத்தியமில்லை என்ற திட்டத்தை செயல்படுத்த தமிழக அரசிற்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கூறும் ஆலோசனை
மேலும் படிக்க : அனுமதியில்லாமல் தடுப்பணை!ஆந்திராவை தமிழக அரசு எச்சரிக்க வேண்டும் என ராமதாஸ் அறிக்கை
மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.