மரக்கன்றுகளை நட்டு மருத்துவர் ராமதாஸ் பிறந்த நாளை கொண்டாடிய பாமகவினர்

Photo of author

By Parthipan K

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் அவர்களின் 81 வது பிறந்த நாள் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் துணை அமைப்பான பசுமைத்தாயகம் நாளை முன்னிட்டு சுற்றுச்சூழல் நலன் கருதி இந்த வருடம் கட்சியின் பொறுப்பாளர் மற்றும் தொண்டர்கள் சார்பில் அவரவர்கள் தங்கள் பகுதியில்,வீட்டில் மரக்கன்றுகளை நட்டு மற்ற மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்து வருகிறார்கள்.

இதுபற்றி கட்சியின் பொறுப்பாளர்கள் கூறுகையில் ஒவ்வொரு வருடமும் ஜீலை 25 ல் மரக்கன்றுகள் நடுதல், இரத்ததானம் வழங்குதல்,பள்ளிக் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்குதல்,அன்னதானம் வழங்குதல் என கொண்டாடி வருகிறோம்.

இந்த வருடம் கொரோனா தொற்றின் காரணமாக சமூக இடைவெளியை கடைப்பிடித்து அவரவர் வீட்டில் மரக்கன்றுகளை நட்டு எங்கள் கட்சியின் நிறுவனர் மரு.ராமதாஸ் ஐயாவின் பிறந்த நாள் மற்றும் பசுமைத்தாயகம் நாளை கொண்டாடி வருவதாக கூறினார்கள்.

கட்சியோடு தலைவரின் பிறந்த நாளில் தொண்டர்கள் மரக்கன்றுகள் நடும் நிகழ்வு சமூக ஆர்வலர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.