குடிபோதையில் பாமக நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய பதவி வழங்குவதா? மருத்துவர் ராமதாஸ் காட்டம்

Photo of author

By Ammasi Manickam

குடிபோதையில் பாமக நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய பதவி வழங்குவதா? மருத்துவர் ராமதாஸ் காட்டம்

கடந்த வாரம் சின்ன சேலம் பாமக ஒன்றிய செயலாளர் சக்திவேல் என்பவரை அப்பகுதியை சேர்ந்த காவல் ஆய்வாளர் சுதாகர் என்பவர் குடிபோதையில் வந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியது அப்பகுதி மக்கள் மட்டுமல்லாமல் தமிழக மக்கள் அனைவரிடத்திலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்த நேரத்தில் மதுக்கடைகள் உள்ளிட்ட எதுவும் இயங்காத நிலையில் சட்டத்தை காப்பாற்ற வேண்டிய ஒரு காவல்துறை அதிகாரியே சட்ட விரோதமாக மதுவை குடித்துவிட்டு சமூக வலைத்தளத்தில் தான் மாமூல் வாங்கியதை பற்றிய தகவலை எழுதியதற்காக இரவு நேரத்தில் வீடு புகுந்து கொலை வெறி தாக்குதல் நடத்தியுள்ளார்.

ஆரம்பத்தில் இதை கண்டுகொள்ளாத மூத்த அதிகாரிகள் இந்த செயலுக்கு எதிராக தமிழகம் முழுவதும் எழுந்த கடுமையான எதிர்ப்பு காரணமாக செய்வதறியாது குற்றவாளியான அந்த காவல் ஆய்வாளர் சுதாகரை ஆயுதப்படைக்கு பணியிடமாற்றம் செய்தனர். அப்போதே அதை எதிர்த்து காவல் துறையினர் குற்றம் செய்தால் பணியிடமாற்றம் தான் தண்டனையா என பொது மக்கள் விமர்சித்து வந்தனர். இந்நிலையில் தான் அவர் மீண்டும் கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் தான் இதை கண்டிக்கும் விதமாக குடிபோதையில் பா.ம.க. நிர்வாகியை தாக்கிய காவல் ஆய்வாளருக்கு முக்கிய
பதவி வழங்குவதா? என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கடுமையாக விமர்சித்துள்ளார். இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளில் கூறியுள்ளதாவது.

1. வெகுமதி
சின்னசேலம் பா.ம.க. ஒன்றிய செயலர் சக்திவேலை குடி போதையில், ஊரே வேடிக்கை பார்த்த நிலையில் வீடுபுகுந்து தாக்கிய காவல் ஆய்வாளர் சுதாகர் முதலில் ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டு அனைத்து மரியாதையுடன் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அமரவைக்கப்பட்டார்.

2. ஆய்வாளர் சுதாகர் மனித உரிமை மீறலுக்காக தண்டிக்கப்பட்டவர். அவர் மீது மேலும் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. அவரது கடந்த கால பின்னணி மிக மிக மோசமானது. அவர் மீதான புகாருக்கு விசாரணையின்றியே தண்டிக்க முடியும். ஆனால், வீடியோ ஆதாரம் வெளியாகியும் நடவடிக்கை இல்லை.
https://twitter.com/drramadoss/status/1250664303620796416

3. 4 நாட்கள் ஆயுதப்படையில் இருந்த சுதாகருக்கு இப்போது அடுத்த வெகுமதியாக கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காவல்நிலைய ஆய்வாளராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மனித உரிமை மீறல் குற்றவாளிக்கு இப்படி மகுடம் சூட்டப்படுவதற்கு உபயதாரர் யார்?