பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக வெகுகாலமாக ஆளும் கட்சிக்கு வைக்கப்பட்ட கோரிக்கை வன்னியர்களுக்கான தனி இட ஒதுக்கீடு கோரிக்கை அந்த கோரிக்கையானது சுமார் 40 ஆண்டு காலமாக பாட்டாளி மக்கள் கட்சியாலும் மருத்துவர் அய்யா அவர்களாலும் வலியுறுத்தப்பட்டு வந்தது. ஆனால் அதனை பெரிய அளவில் எந்த ஒரு ஆட்சியாளர்களும் கண்டுகொள்ளவில்லை. அவ்வாறு இருக்கும்போது தற்போது முதல்வராக இருக்கக்கூடிய எடப்பாடி பழனிச்சாமி பாட்டாளி மக்கள் கட்சியின் அந்த கோரிக்கைக்கு செவிசாய்த்து மருத்துவர் அய்யாவின் நெடுங்கால கோரிக்கையை நிறைவேற்றும் விதமாக சட்டசபையில் வன்னியர்களுக்கு என தனியாக 10.5 சதவீத இட ஒதுக்கீடு சட்ட மசோதாவை தாக்கல் செய்து நிறைவேற்றி இருக்கிறார்.
இதன் காரணமாக, தமிழகத்தில் மட்டுமல்லாது இந்தியா முழுவதிலும் இருக்கக்கூடிய வன்னியர்கள் பெரு மகிழ்ச்சியில் இருக்கிறார்கள். அதே போல மருத்துவர் அய்யா அவர்களையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் கொண்டாடி வருவதோடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கொண்டாடி வருகிறார்கள். இதையெல்லாம் பார்த்த ஸ்டாலின் சற்றே கலங்கிப் போய் இருப்பதாக சொல்கிறார்கள். அதன் காரணமாகவே அவர் கூட்டணியின் இருக்கின்ற சிறு சிறு கட்சிகளை வைத்து அதிமுகவையும், பாட்டாளி மக்கள் கட்சியையும் இந்த இட ஒதுக்கீடு தொடர்பாக விமர்சனம் செய்ய வைத்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.
இந்த சூழ்நிலையில், வன்னியர்களுக்கு கொடுக்கப்பட்ட 10.5 சதவீத இட ஒதுக்கீடு தொடர்பாக ஐரோப்பாவில் இருந்து மருத்துவர் அய்யா அவர்களுக்கு ஒரு வாழ்த்து செய்தி வந்திருக்கிறது. அந்த வாழ்த்துச் செய்தி சம்பந்தமாக மருத்துவர் அய்யா அவர்கள் வெளியிட்டிருக்கின்ற பதிவு ஒன்றில் உலகமெங்கும் இருக்கும் தமிழர்கள் எனக்கு அலைபேசியில் நன்றி கூறி வருகிறார்கள். திருப்பூர் மாவட்டம் தாராபுறத்தை சொந்த ஊராகக் கொண்ட ஜெர்மன் மற்றும் ஐரோப்பிய நாடுகளில் வாழ்ந்துவரும் தமிழர்கள் நலச்சங்கத்தின் தலைவர் பிரேம் குமார் என்னுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உரையாற்றினார். அந்த சமயத்தில் வன்னியர் சமுதாயத்திற்கு தனி இட ஒதுக்கீடு பெற்று கொடுத்ததற்காக என்னுடைய நன்றிகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று தெரிவித்திருக்கிறார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டு மக்களுக்காக இட ஒதுக்கீடு தொடர்பான விழிப்புணர்வை உண்டாக்கியது. அனைத்து சமூகமும் நமக்கு எத்தனை சதவீதம் என்று கேட்க ஆரம்பித்து இருப்பதும், உங்களுடைய சமூகநீதி போராட்டத்திற்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி. தமிழ்நாட்டு மக்கள் எல்லோரும் அவர் அவர்களின் உரிமைகளை பெற்று வாழ வேண்டும் என்று நீங்கள் முன்னெடுக்கும் போராட்டங்கள் அனைத்தும் தொடரவேண்டும். அது வெற்றியிலேயே முடிய வேண்டும் என்று தெரிவித்தார் என்று தெரிவித்திருக்கிறார் மருத்துவர் ஐயா.
வன்னியர் இன மக்களுக்கு தற்போது கிடைக்கப் பெற்றிருக்கும் இந்த 10.5 சதவீத இட ஒதுக்கீடு அந்த சமுதாயத்தில் ஒரு மிகப்பெரிய வரலாற்று மாற்றத்தையும், வளர்ச்சியையும், உண்டாகப் போகிறது என்பதை கடந்து ஒரு மிகப்பெரிய சமுதாயம் மிகப்பெரிய வளர்ச்சி அடைய போகிறது என்பதே உண்மை. ஒட்டுமொத்த தமிழ்நாடும் மிகப்பெரிய வளர்ச்சி அடையும் என்பதை நினைத்துப் பார்க்கையில் எங்கள் அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது ஐயா. அதற்காக ஜெர்மன் மற்றும் ஐரோப்பியாவில் வாழும் தமிழர்களாகிய எங்களுடைய சார்பில் உங்களுக்கு மிக்க நன்றி ஐயா என்று உரையாற்றினார் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.