State

கொடுத்த வாக்குறுதியில் உறுதியாக இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ்! ஆளுங்கட்சியினர் பெருமிதம்! எதிர்கட்சியினருக்கு ஏமாற்றம்

Photo of author

By Parthipan K

கொடுத்த வாக்குறுதியில் உறுதியாக இருந்த பாமக நிறுவனர் ராமதாஸ்! ஆளுங்கட்சியினர் பெருமிதம்! எதிர்கட்சியினருக்கு ஏமாற்றம்

விடுதலைப் போராட்ட வீரரும், தமிழக உள்ளாட்சித் துறையின் முன்னாள் அமைச்சரும், நலிந்த பிரிவு மக்களுக்காக குரல் கொடுத்தவருமான மறைந்த எஸ்.எஸ். ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப் படத்தினை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று (19/07/2019) திறந்து வைத்தார்.

இந்த விழாவில், சபாநாயகர் தனபால், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின், துணைத் தலைவர் துரைமுருகன், மாநிலங்களவை உறுப்பினர்கள் மைத்ரேயன், புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர்கள் சந்திரசேகரன் , அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர் ஜி.கே. மணி, ஏ.கே .மூர்த்தி , முன்னாள் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கிருஷ்ணசாமி, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உள்ளிட்டோர்  உள்பட பலர் பங்கேற்றனர். இந்த விழாவில் பங்கேற்பதற்காக பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசுக்கும் தமிழ்நாடு அரசு சார்பில் அழைப்பிதழ் அனுப்பப்பட்டது. 

ஆளும் கட்சியின் கூட்டணி தலைவரான மருத்துவர் ராமதாசின் வருகையை தமிழக முதல்வர் உள்பட பலரும் எதிர்பார்த்தனர்.இந்நிலையில் இந்த விழாவில் டாக்டர் ராமதாஸ் பங்கேற்பதை ஆளுங்கட்சியினரை விட மற்ற கட்சிகளும் தமிழக ஊடகங்களும் தான் அதிகமாக எதிர்பார்த்திருந்தார்கள். ஏனெனில் பாமகவை தொடங்கிய பொழுது மருத்துவர் ராமதாஸ் எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என ஒரு வாக்குறுதி அளித்திருந்தார். இந்த விழாவில் பங்கேற்பதன் மூலம் அந்த வாக்குறுதியை இன்று மருத்துவர் மீறுவாரா? என பல ஊடகங்களும் கடுமையாக விமர்சனம் செய்து எழுதி எதிர்பார்த்து காத்திருந்தனர். 

திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகளின் இணையதள தொண்டர்களும் நிர்வாகிகளும் அதை ஆவலுடன் எதிர்பார்த்து இருந்தார்கள். ஆனால் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் விதமாக டாக்டர் ராமதாஸ் தன்னுடைய வாக்குறுதியில் உறுதியாக இருப்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கடிதம் மூலம் தெரிவித்து பதிலடி கொடுத்துள்ளார். இவ்வாறு மருத்துவரின் வருகையை எதிர்பார்த்து காத்திருந்தவர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. பாமக சார்பில் தலைவர் ஜிகே மணி, எம்பி அன்புமணி, முன்னாள் மத்திய அமைச்சர் ஏகே மூர்த்தி போன்றவர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். 

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களுக்கு மருத்துவர் ராமதாஸ் எழுதிய கடிதத்தில், “அன்புள்ள தமிழக முதலமைச்சர் மாண்புமிகு எடப்பாடி பழனிச்சாமி அவர்களுக்கு வணக்கம்!

உழவர் உழைப்பாளர் கட்சியின் நிறுவனரும் தமிழக முன்னாள் அமைச்சருமான எஸ் எஸ் ராமசாமி படையாட்சியார் அவர்களின் திருவுருவப்படத்தை சட்டப் பேரவை மண்டபத்தில் இன்று மாலை ஐந்து முப்பது மணிக்கு திறக்கும் விழாவிற்கான சட்டப் பேரவைச் செயலாளரின் அழைப்பிதழ் கிடைத்தது. மிக்க நன்றி! 

வாழ்நாளில் சட்டப்பேரவையிலும் நாடாளுமன்றத்தில் ஓர் அடி எடுத்து வைக்க மாட்டேன் என்று உறுதி ஏற்று, அதை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதால் இவ்விழாவில் பங்கேற்க இயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

ராமசாமி படையாட்சியார் உரிமைகள் அற்று கிடந்த ஊமை ஜனங்களுக்காக இந்தியா விடுதலை அடைந்த காலத்திலேயே குரல் கொடுத்தவர், போராடியவர். அவரது பணியை அங்கீகரிக்கும் வகையில் சட்ட பேரவை மண்டபத்தில் அவரது உருவப்படத்தை திறப்பது அவருக்கு செய்யப்படும் சரியான அங்கீகாரம் ஆகும். இதற்காக தங்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் நன்றிகளை தெரிவித்துக்கொள்கிறேன். 

ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தாங்கள் தான் அறிவித்து அரசாணை வெளியிட்டு இருந்தீர்கள். அதுமட்டுமின்றி கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் அவரது உருவச் சிலையுடன் கூடிய நினைவு மண்டபம் அமைக்கப்படும் என்று அறிவித்து அதற்கான அடிக்கல்லையும் கடந்த ஆண்டு நட்டு வைத்தீர்கள். அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. 

பெரியவர் ராமசாமி படையாச்சியார் நினைவைப் போற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்ட பணிகளில் தொடர்ச்சியாக அவரது திருவுருவ படமும் சட்டப் பேரவை மண்டபத்தில் திறக்கப்படுவது அவருக்கு கூடுதல் பெருமை சேர்க்கும் என்பதில் ஐயமில்லை. திரு ராமசாமி படையாச்சியார் உருவ படம் திறப்பு விழா மிகவும் சீரும் சிறப்புமாக நடைபெற பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் எனது உளமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். என டாக்டர் ராமதாஸ் அந்த கடிதத்தில் தெரிவித்துள்ளார். 

மருத்துவர் ராமதாஸ் பாட்டாளி மக்கள் கட்சியை ஆரம்பிக்கும் போது எக்காரணத்தைக் கொண்டும் என்னுடைய கால்கள் சட்டமன்றத்திலோ நாடாளுமன்றத்திலோ படாது என்று கட்சியினருக்கு அளித்த வாக்குறுதியானது தேர்தல் அரசியல் மூலமோ அல்லது வேறு வகையிலோ பதவி பெற்று அங்கு செல்ல மாட்டேன் என்பதை தான் குறிப்பிட்டார் என்றாலும் தான் கொடுத்த வாக்குறுதியில் மருத்துவர் ராமதாஸ் உறுதியாக இருந்தது மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. இதை வைத்து அரசியல் செய்ய காத்திருந்த எதிர்க்கட்சியினருக்கு இவரின் இந்த முடிவு ஏமாற்றத்தை தந்துள்ளது.

மேலும் இது போன்ற தமிழ் செய்திகள்,மாவட்ட செய்திகள், மாநில செய்திகள், தேசிய செய்திகள், உலக செய்திகள், விளையாட்டு செய்திகள், அரசியல் செய்திகள், வணிக செய்திகள்,தொழில்நுட்ப செய்திகள்,பொழுதுபோக்கு செய்திகள்,சினிமா செய்திகள், ஆன்மீக செய்திகள், ஜோதிட செய்திகள் போன்ற நடுநிலையான செய்திகளை உடனுக்குடன் உண்மைத் தன்மையுடன் தெரிந்து கொள்ள நமது News4 Tamil இணையதளத்தையும் முகநூல் பக்கம் மற்றும் ட்விட்டர் பக்கங்களை பின் தொடருங்கள்.

மேலும் தொடர்ந்து நமது செய்திகளை உடனுக்குடன் வாட்ஸ் ஆப்பில் தெரிந்து கொள்ள இந்த இணைப்பை கிளிக் செய்து வாட்ஸ் ஆப் மூலம் ACT NEWS என டைப் செய்து அனுப்பவும்.

பப்பாளி பழத்தில் இவ்வளவு மருத்துவ குணங்களா! இத்தனை நோய்களுக்கு மருந்தா!

கார்த்தியின் அதிரடி முடிவு..! அதிர்ச்சியில் உதவி இயக்குனர்கள்

Leave a Comment