அண்மையில் மத்தியபிரதேச மாநிலம் அறிவித்துள்ள புதிய அறிக்கையில், மத்திய பிரதேச மாநில அரசு தரும் அனைத்து வேலைவாய்ப்புகளும் அம்மாநில இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும். மேலும் இது குறித்து சட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.
மத்தியப்பிரதேச மாநில வளங்கள் அனைத்தும் அம்மாநில மக்களுக்கானது என ம.பி மாநில முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்றைய (18 ஆக) அறிக்கையில் தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில், இதனடிப்படையில் தமிழகத்திலும் அதேபோன்று ஒரு அறிக்கையினை வெளியிட்டு சட்டம் இயற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் அனைத்து அரசு வேலைவாய்ப்புகளும் அம்மாநில மக்களுக்கு மட்டும் தான் வழங்கப்படும் என்று முதலமைச்சர் சிவராஜ்சிங் சவுகான் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. தமிழ்நாட்டிலும் அதேபோன்ற அறிவிப்பை வெளியிட்டு, சட்டமியற்ற தமிழக அரசு முன்வர வேண்டும்!
— Dr S RAMADOSS (@drramadoss) August 19, 2020
இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இன்று (19 ஆக) பதிவிட்டுள்ள அவர், “மத்திய பிரதேச மாநிலத்தில் அரசு வேலைகள் அனைத்தும் அந்த மாநில மக்களுக்கு இளைஞர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்து இருப்பது பாராட்டத்தக்கது. அதைப் போன்று தமிழகத்திலும் அறிக்கை வெளியிட்டு, சட்டமியற்ற வேண்டும்” என தமிழக அரசுக்கு மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பக்கத்தில் வலியுறுத்தியுள்ளார்.