முன்பு இருந்ததைவிட தற்சமயம் கொரோனா தொற்று அதிகமாகி வருகிறது. இதனைத்தொடர்ந்து மத்திய மாநில அரசுகள் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.இந்த நிலையில், மக்கள் அதிகமாக ஒன்று கூடும் பகுதிகளில் டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூட வேண்டும் என்று பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்திருக்கிறார். இதுதொடர்பாக அவர் தன்னுடைய வலைப்பக்கத்தில் வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,
தமிழகத்தில் நோய்த்தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டிருக்கிறது. இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரையிலான ஊரடங்கு போதுமானதாக இல்லை மக்களை பாதிக்காத வண்ணம் இன்னும் சற்றே கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவித்திருக்கிறார்.ஆகவே மக்கள் கூட்டம் அதிகமாக ஒன்றுசேரும் பகுதிகளில் மிகவும் முக்கியமானதாக இருக்கும் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும் அதன் வழியாக இந்த நோய் தொற்றிலிருந்தும் 200 வகையான நோய் பாதிப்புகளில் இருந்தும் பொது மக்களை காப்பாற்ற இயலும் என்று தெரிவித்திருக்கிறார்.
இருந்தாலும் இவை எல்லாவற்றையும் விடவும் முக்கியமான விஷயம் என்னவென்றால் மக்களாகிய நீங்கள் இந்த விஷயத்தில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் தேவையில்லாமல் வீடுகளை விட்டு வெளியே வரக்கூடாது சமூக இடைவெளியை பின்பற்ற வேண்டும் கவசம் அணிய வேண்டும் மற்றும் தகுதி உள்ள எல்லோரும் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.