அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!! 

Photo of author

By Amutha

அதிரடியாக உயர்ந்த சிலிண்டர் விலை !! மக்களுக்கு அதிர்ச்சி தரும் ஷாக் நியூஸ்!! 

மீண்டும் அதிர்ச்சி தரும் செய்தியாக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தப்பட்டு உள்ளது. மாதத்தின் முதல் நாளான இன்று கேஸ் சிலிண்டர் விலை உயர்த்தப்பட்டு உள்ளது.

பொதுவாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலையானது எண்ணெய் நிறுவனங்களால் நிர்ணயிக்கப்பட்டு வருவது வழக்கம். இந்த விலை நிர்ணயம் சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் அடிப்படையில் நிர்ணயம் செய்யப்படும். கச்சா எண்ணெய் விலை மாற்றங்கள் பொறுத்து விலை கூடவோ குறையவோ செய்யப்படுகிறது.

இதை அடிப்படையாக கொண்டே மாதத்தின் முதல் நாளில் வீடுகளுக்கு பயன்படும் சமையல் எரிவாயு மற்றும் வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலைகளில் மாற்றம் ஏற்படுகிறது. இதன்படி இன்று ஜூலை 1 மாதத்தின் முதல் நாளான இன்று சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வீட்டுஉபயோகத்திற்கான  14.2 கிலோ எடை சிலிண்டரில் எந்தவித மாற்றமும் செய்யப்படவில்லை. ஆனால் அதேசமயம் வணிக பயன்பாட்டுக்கு உபயோகப் படுத்தும் சிலிண்டர் விலை ரூ.8 அதிகரிக்கப் பட்டுள்ளது. கடந்த மாதம் வரை ரூ. 1937 வரை இருந்த சிலிண்டர் விலை தற்போது ரூபாய் 8 அதிகரித்து ரூ.1945 ஆக உயர்ந்துள்ளது.

இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைந்து வந்த நிலையில் தற்போது விலையேற்றம் கண்டுள்ளது வணிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. ஹோட்டல் மற்றும் டீ கடைகளில் இந்த வகையான சிலிண்டர்களின் பயன்பாடே அதிகம் என்பதால் இனிமேல் உணவுப் பொருட்களின் விலையும் அதிகரிக்க கூடுமோ என்ற வினா அனைவரிடத்திலும் நிலவுகிறது.