அதிரடியாக குறைந்த மின் இணைப்பு கட்டணம்!! மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

Photo of author

By Rupa

அதிரடியாக குறைந்த மின் இணைப்பு கட்டணம்!! மின்சார வாரியம் வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு!!

சென்னை போன்ற பெரிய மாநகரங்களில் நிலத்தின் வழியே மின்விநியோகம் செய்யப்பட்ட வருகிறது. ஆனால் இதனின் கட்டணமானது மேர்ப்புற மின் கம்பிகள் மூலம் இணைக்கப்படுவதுடன் அதிகமாக வசூல் செய்யப்படுகிறது. கிராமப்புறங்களில் மற்றும் சிறிய நகரங்களில் தற்போது வரை மேர்ப்புற  மின்கம்பிகள் மூலம் தான் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இதனின் கட்டணமானது குறைவுதான் தற்பொழுது சில இடங்களில் நிலத்தின் வழியாகவும் ஒரு சில இடங்களில் மின்கம்பிகள் இணைப்பும் பாதி பாதியாக இணைக்கப்பட்டு வருகிறது.

அவ்வாறு உள்ள இடங்களில் புதிய மின் கட்டண இணைப்பானது சற்று அதிகமாக வசூல் செய்யப்படுவதாக மின் நுகர்வோரிடம் தொடர்ந்து புகார் அளித்து வந்தனர். இந்த புகார் மீது தற்பொழுது மின்வாரியமானது கவனம் செலுத்திய நிலையில், இது குறித்து குறித்த நடவடிக்கை எடுக்குமாறு மின்சார ஆணையத்திற்கு உத்தரவிட்டது. இந்த உத்தரவினை அடுத்து இனி வரும் நாட்களில் நிலத்திற்கு அடியில் 75 சதவீதத்திற்கும் அதிகமான நெட்வொர்க் கேபிள்கள் இணைப்பு கொடுக்கும் பட்சத்தில் அதிக கட்டணம் வசூல் செய்யலாம் என்றும், 75 சதவீதத்திற்கும் குறைவாக இருக்கும் பட்சத்தில் கட்டணமும் அதற்கு ஏற்றார் போல தான் வசூல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளனர்.

மேற்கொண்டு தற்பொழுது மின்சார வாரியமானது மின் கட்டண மென்பொருள் மாற்றி அமைக்க உள்ளதால் இனிவரும் காலங்களில் புதிய இணைப்பு குறித்த கட்டணமானது சற்று குறையக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.