அடுத்த படமும் இப்படி தான் இருக்கும் : பிரபல யூடியூப் சேனலுக்கு பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குநர்! புதிய படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்

0
231

அடுத்த படமும் இப்படி தான் இருக்கும் : பிரபல யூடியூப் சேனலுக்கு பதிலடி கொடுத்த திரௌபதி இயக்குநர்! அடுத்த படத்தின் அறிவிப்பை வெளியிட்டார்

திரௌபதி ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாளில் இருந்து சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் பஞ்சமே இல்லை. அத்தனை சர்ச்சைகளுக்கும் நடுவே கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது.

இத்திரைப்படத்தை பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்தப் படம் வெளியான நாளிலிருந்து இன்றுவரை வசூல் சாதனைகளையும் புரிந்து வருகிறது.

ஒரு பக்கம் வரவேற்பு இருந்தாலும் ஒரு குறிப்பிட்ட பிரிவினர் மட்டும் ஆரம்பத்தில் இருந்தே எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இவர்கள் சமூக வலைதளங்களில் இப்படத்தின் இயக்குனரிடம் மோதல் போக்கையே கடைபிடித்து வந்தனர்.

இதற்கிடையில் இயக்குனர் மோகன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவரிடம் வம்பிழுக்கும் படியான கேள்விகள் கேட்கப்பட்டது இதனை தொடர வேண்டாம் என்று இயக்குநர் நன்றி கூறி முடித்து இருக்கிறார்.

இதனை அந்த யூடியூப் சேனல் பயன்படுத்தி சில காட்சிகளை நீக்கிவிட்டு அவர் பாதியிலேயே வெளியேறியது போல் பேட்டியை ஒளிபரப்பி உள்ளனர். இதை பார்த்த இயக்குனர் தான் அப்படி செய்யவில்லை இதற்கு அந்நிறுவனம் விளக்கமளித்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கூறியிருந்தார்.

ஆனால் அந்த நிறுவனம் இயக்குநர் மோகனுக்கு எந்த பதிலும் விளக்கமும் அளிக்கவில்லை. இதனால் இயக்குனர் அவர்களின் அலுவலகத்திற்கு சென்று விளக்கம் கேட்டபோது அந்த காட்சி பதிவாகவில்லை என்று மழுப்பலாக பதிலளித்துள்ளனர்.

இயக்குனர் மோகன் இவர்களின் ஊடக அறம் இவ்வளவுதான் இவர்கள் போலி நடுநிலையாளர்கள் என்று சமூகவலைதளத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு அந்த நிறுவனம் சமூக வலைத்தளத்தில் மோதல் போக்கிலேயே பதில் அளித்து உள்ளது.

இவர்கள் போக்கை புரிந்து கொண்ட மோகன் திரௌபதி திரைப்படத்தை வைத்து விளம்பரம் தேடுகிறார்கள் என்று கடுமையாக சாடியிருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அந்த யூடியூப் சேனலை கடுமையாக திட்டித் தீர்த்தனர்.

இவர்கள் திரௌபதி என்ற கடவுள் பெயரை வைத்ததால் தான் இப்படி வன்மத்தை கக்கி வருகிறார்கள். அதனால் என்னுடைய அடுத்த படத்தின் தலைப்பும் கடவுள் பெயரில் தான் இருக்கும் என்று இயக்குனர் மோகன் தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார்.

மோகனின் அதிரடியான இந்த பதிலை பார்த்த ரசிகர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்து பாராட்டி வருகின்றனர்.

Previous articleதனது கிராமத்தில் 250 குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்த 21 வயது இளம்பெண்! நார்வே பிரதமர் பாராட்டிய சமூகசேவகி..!!
Next articleவெளிநாட்டில் இருந்து தமிழகம் வந்த ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு; விழிப்புணர்வுடன் கவனமாக இருங்கள்!