சர்வதேச மகளிர் தினத்தில் புதிய மைல் கல்லை எட்டிய திரௌபதி திரைப்படம் : உற்சாகத்தில் படக்குழு

0
264

பல சர்ச்சைகளுக்கு மத்தியில் கடந்த மாதம் 28ம் தேதி திரௌபதி திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தின் ட்ரெய்லர் ரிலீஸ் ஆன நாள் முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இந்தத் திரைப்படம் தயாரிப்பு செலவை விட 30 மடங்கு வசூலை ஈட்டி உள்ளது குறிப்பிடத்தக்கது. இது திரைத்துறையில் உள்ள பல தயாரிப்பாளர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.

திரௌபதி திரைப்படம் பெண்களை விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக உள்ளது என்று பொதுமக்கள் பெரிதும் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் திரௌபதி திரைப்படம் புதிய மைல்கல்லை எட்டியுள்ளது என்று அப்படத்தின் இயக்குனர் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.

“பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் ???.. 2020 ம் ஆண்டின் முதல் #Blockbuster படம் #திரெளபதி . ஆதரவு அளித்த மக்களுக்கும் நேர்மையான ஊடகங்களுக்கும், விநியோகஸ்தர்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்..” என்று கூறியுள்ளார்.

இந்த ஆண்டு உச்ச நட்சத்திரத்தின் படம் முதல் பல முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் எதிர்பார்த்த அளவு வெற்றி அடையவில்லை. திரௌபதி திரைப்படம் சிறிய பட்ஜெட்டில் தயாராகி மாபெரும் அடைந்துள்ளதால் இது இந்த ஆண்டின் முதல் பிளாக் பஸ்டர் திரைப்படம் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இன்று மகளிர் தினம் என்பதால் இந்த வெற்றியையும் ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Previous articleயெஸ் வங்கி நிறுவனர் கைது
Next articleதனது கிராமத்தில் 250 குடும்பத்தின் பாதுகாப்பை உறுதி செய்த 21 வயது இளம்பெண்! நார்வே பிரதமர் பாராட்டிய சமூகசேவகி..!!