திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!!

0
225

திராவிட மாடல் திராவிட மாடல் என்று  கூப்பாடுபோடுபவர்களே அது எங்களுடையது….வைரலாகும் பழனிச்சாமியின் பேச்சு!!

சிவகாசியில் இன்று பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் முன்னாள் முதல்வர் மற்றும் இடைக்கால பொதுச்செயலாளர் ஆன எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார்.அவ்வாறு கலந்துகொண்டவர் திமுக வின் திராவிட மாடல் பற்றி பேசினார்.முதலில் திமுக நிர்வாகிகள் மக்களை அவதூறாக பேசியது குறித்து கண்டனம் தெரிவித்தார்.நாங்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது,மக்களுக்கு மரியாதை கொடுப்போம்.தற்போதைய திராவிட மாடல் ஆட்சி மக்களுக்கு மரியாதை தருவதில்லை.

மேலும் மாணவர்களுக்கு வழங்கி வந்த மடிக்கணினி திட்டத்தையும் திமுக நிறுத்திவிட்டது. தமிழ்நாட்டில் இருந்து நீட் ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கூறினார்.இந்தியாவில் தமிழக மாநிலம் முன்னேறி இருப்பதற்கு அதிமுக தான் காரணம் எனக் கூறினார்.திராவிட மாடலை உருவாக்கியதே அதிமுக தான்.

அதேபோல திமுக ஆட்சி அமைத்து 16 மாதங்கள் ஆகிறது.தற்போது வரை திமுக திராவிட மாடல் ,திராவிட மாடல் என்று முதல்வர் மூச்சுக்கு முன்னூறு முறை கூறுகிறார்,மக்களுக்கு அப்படி என்ன திராவிட மாடலில் செய்துள்ளார்??என கேள்வி எழுப்பினார்.அதனையடுத்து சிவகாசியை மாநகராட்சியாக மாற்றியது அதிமுக தான் எனக் கூறினார்.

பட்டாசு தொழிலை பாதுகாக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.திராவிட மாடலை பற்றி எடப்பாடி கூறியது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Previous articleஜெயிலர் படத்தில் ரஜினியின் கெட்டப்! இணையத்தில் வைரலாகும் போஸ்ட்!
Next articleகொஞ்சநாள் சோஷியல் மீடியாவுக்கு ஓய்வு… சமந்தா பற்றி கிளம்பிய வதந்தி