நாட்டுக்கே முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி!!  உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!! 

0
100
Dravida model rule as a pioneer for the country!! Pride of Udayanidhi Stalin!!
Dravida model rule as a pioneer for the country!! Pride of Udayanidhi Stalin!!

நாட்டுக்கே முன்னோடியாக திராவிட மாடல் ஆட்சி!!  உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!! 

தமிழகத்தில் நடைபெறும் திராவிட மாடல் ஆட்சி தான் இந்தியாவுக்கு முன்னோடியாக உள்ளது என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விழாவில் பேசினார்.

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே மண்டலவாடியில் கலைஞரின் நூற்றாண்டு பிறந்தநாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல், முடிவுற்ற திட்டப்பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமை தாங்கினார். கலெக்டர் பாஸ்கரபாண்டியன் வரவேற்று பேசினார். விழாவில் தமிழக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு ரூ.74 கோடி மதிப்பில் 14,253 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார்.

விழாவில் அவர் பேசியதாவது,

தமிழகத்தில் திமுக பதவியேற்று 26 மாதங்கள் ஆகிறது. எல்லாருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்ற திராவிட மாடல் ஆட்சி லட்சியத்திற்கு ஏற்ப இதுவரை 260க்கும் மேற்பட்ட திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

ஒவ்வொரு குடும்பத்துக்கும் அரசின் திட்டம் சென்றடைய வேண்டும் என்பதுதான் இந்த ஆட்சியின் முக்கிய லட்சியம். இதன்படி தமிழகத்தில் புதுமைப்பெண் திட்டம் மூலம் 2 லட்சம் மாணவிகள் பயனடைந்துள்ளனர். அதேபோல் காலை சிற்றுண்டி திட்டம் மூலம் சுமார் 17 லட்சம் மாணவ மாணவியர் பயன்பெற்று வருகின்றனர். மேலும் மருத்துவ செலவு பாதியாக குறைய மக்களை தேடி மருத்துவம் பெரிதும் துணை புரிந்து வருகிறது.

மேலும் இன்னுயிர் காப்போம், நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் மூலம் 1100 பேர் பயன்பெற்றுள்ளனர். அடுத்ததாக இல்லம் தேடிக் கல்வி திட்டத்தின் மூலம் 63,400 பேர் பயன் பெற்றுள்ளனர். அதேபோல் மகளிர் அனைவரும் எதிர்பார்க்கும் முக்கிய திட்டமான உரிமைத் தொகை செப்டம்பர் 15 அன்று முதலமைச்சர் தொடங்கி வைக்க இருக்கிறார்.

தமிழகத்தில் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களை பார்த்து பிற மாநிலங்களிலும் அதேபோல் திட்டங்கள் கொண்டுவரப்படுகின்றன. எனவே தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சியானது இந்தியாவிற்கே முன்னோடியாக உள்ளது. என அவர் தெரிவித்தார்.

Previous articleமெட்ரோ ரயில் சேவை பாதிப்பு!! பயணிகள் கடும் அவதி!!
Next articleஅறநிலையத்துறைக்கு பறந்த அதிரடி உத்தரவு!! சென்னை உயர்நீதிமன்றம் அறிவிப்பு!!