நடிகை கஸ்தூரியம் சில பாஜக கட்சியைச் சார்ந்தவர்களும் கடந்த சில தினங்களாக திமுக பயன்படுத்தும் திராவிடம் என்ற வார்த்தையையும், திமுக ஆட்சியை விடிய அரசு என்ற அர்த்தத்திலும், இனைத்து திராவிடியா என்ற வார்த்தையை சமூக வலைதளங்களில் பயன்படுத்துகின்றன.
திமுகவின் நாடாளுமன்ற உறுப்பினர் அப்துல்லா தேசிடியா என்ற வார்த்தையை சமூக வலைதளங்களில் பயன்படுத்த தொடங்கியுள்ளார். திமுகவில் மற்றவர்களும் இதே வார்த்தையை பயன்படுத்துமாறு வலியுறுத்தி வருகிறார். ஆகவே சமூக வலைதளங்களில் பாஜகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வருகிறது.
இந்த இரு வார்த்தைகளை பயன்படுத்துபவர்கள் திராவிடம், விடியா, தேசியம் என்ற வார்த்தைகளை வைத்து விளையாடுகிறோம் என்று தெரிவித்துக் கொண்டாலும் திராவிடியா தேசிடியா என்ற வார்த்தைகள் உண்மையில் மறைமுகமாக ஆபாசமான அர்த்தத்தை கொடுப்பதாக நடுநிலையாளர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்.