அய்யய்யோ சட்டத்தை மீறிவிட்டார்! உடனே வாபஸ் பெறுங்கள் கதறும் கூட்டணி கட்சிகள்!

0
75

தமிழகத்தில் குழப்பத்தை ஏற்படுத்தும் விதத்தில் ஆளுநர் தொடர்ந்து பேசி வருவதாக கண்டனம் தெரிவித்திருக்கின்ற திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் அரசியலமைப்புக்கு எதிராக பேசுவதாக இருந்தால் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி இருந்தார்கள். அதோடு ஆளுநர் ஆர் என் ரவி அவர்களின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு, கே எஸ் அழகிரி, வைகோ, கே பாலகிருஷ்ணன், முத்தரசன், திருமாவளவன் உள்ளிட்ட திமுகவின் கூட்டணி கட்சி தலைவர்கள் ஒன்றிணைந்து கூட்டணிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்கள்.

இந்த நிலையில், இன்று காலை தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தி குடியரசுத் தலைவரிடம் திமுக மனு கொடுக்க வல்லதாக தகவல் கிடைத்திருக்கிறது. இது குறித்து திமுகவின் பொருளாளர் டி ஆர் பாலு திமுகவின் நாடாளுமன்ற குழு உறுப்பினர்களுக்கும், மற்ற கூட்டணி கட்சிகளுக்கும் கடிதம் ஒன்றை எழுதி இருப்பதாக சொல்லப்படுகிறது.

அந்த கடிதத்தில் தமிழக ஆளுநரை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தி வழங்கப்படும் மனுவில் உள்ள குறிப்பு அணையை படித்துவிட்டு கையெழுத்திட வருகின்ற 3ம் தேதிக்குள் திமுகவின் தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்திற்கு வரவேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளார் டி ஆர் பாலு.

தமிழக ஆளுநர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கும், மாநில சட்டசபையின் செயல்பாடுகளுக்கும் முட்டுக்கட்டை போடுகிறார். கூட்டுறவு சட்டத்திருத்தம், நீட் உள்ளிட்ட சட்டமன்றம் நிறைவேற்றி அனுப்பிய 20 முக்கிய மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் திருப்பி அனுப்பியும், கிடப்பில் போட்டும் மாநில சட்டமன்றத்தின் உணர்வுகளை மற்றும் மாண்புகளை புண்படுத்துகிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசியல் சட்டத்தின் முக உரையில் தெரிவிக்கப்பட்டுள்ள மதச்சார்பின்மைக்கு எதிராக பேசி இந்தியா மதம் சார்ந்த நாடு தான் என்று தெரிவிக்கிறார். அரசியல் சட்டத்தை மதிக்க வேண்டியவர், அதன்படி நடக்க வேண்டியவர் சனாதன தர்மம் பேசுகிறார். மத அடிப்படையில் மக்களை பிரித்தாளும் சூழ்ச்சியை செய்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருக்குறளை விமர்சனம் செய்கிறார் திராவிட கலாச்சாரம் மற்றும் தமிழர் பெருமைகளை கொச்சைப்படுத்தி பேசுகிறார். நடுநிலை தவறி அரசியல் சார்ந்த அதுவும் பாஜக அரசியல் சார்ந்த கருத்துக்களை பேசி அரசியல் சட்டத்தை மதிக்காமல் அரசியல் சட்டப்படி எடுத்துக் கொண்டுள்ள பதவி பிரமாணத்தை ஆளுநர் மீறிவிட்டார். ஆகவே அவரை ஆளுநர் பதவியில் இருந்து நீக்க கோரி திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக மனு வழங்கப்படுகிறது.