உயரமான இடத்திலிருந்து கீழே விழுவது போல் கனவு வருகிறதா? அப்போ இது தான் காரணம்!!

Photo of author

By Rupa

உயரமான இடத்திலிருந்து கீழே விழுவது போல் கனவு வருகிறதா? அப்போ இது தான் காரணம்!!

ஒவ்வொரு மனிதருக்கும் தூக்கத்தில் கனவு வருவது என்பது இயல்பான ஒரு விஷயம்.சிலருக்கு கனவில் இறந்தவர்கள் வருவார்கள்.சிலருக்கு பாம்பு,கடவுள்,புதையல் தோன்றுவது போல் கனவு வரும்.இவை அனைத்திற்கும் ஒவ்வொரு பலன் இருக்கிறது.அதேபோல் உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவது போல் கனவு வந்தால் என்ன பலன் என்பது குறித்து அறிந்து கொள்ளுங்கள்.

உயரமான இடத்தில் இருந்து கீழே விழுவது போன்று கனவு வந்தால் அது உங்களுக்கான எச்சரிக்கை என்று அர்த்தம்.உங்களுக்கு தொழில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.வியாபாரத்தில் வந்து கொண்டிருந்த வருமானம் தடைபடப் போகிறது என்று அர்த்தம்.

நீங்கள் ஏதேனும் ஒரு முக்கிய முடிவு எடுக்க போகிறீர்கள் என்றால் அதை சில நாட்களுக்கு தள்ளி வைப்பது நல்லதாக இருக்கும்.எந்த ஒரு காரியத்தை தொடங்கினாலும் அதில் நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.ஆகையால் தற்சமயம் எந்த ஒரு செயலிலும் இறங்காமல் இருப்பது நல்லது.

உங்களை ஒருவர் தள்ளி விடுவது போன்று கனவு வந்தால் கெட்ட காலம் ஆரம்பிக்க போகிறது என்று அர்த்தம்.உங்கள் சுற்றத்திடம் சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டுமென்று அர்த்தம்.

இதுபோன்ற கனவு வந்தால் பொருள் நஷ்டம் ஏற்பட போகிறது என்று அர்த்தம்.எனவே எந்த ஒரு முடிவு எடுப்பதாக இருந்தாலும் நன்கு ஆராய்ந்து சுய சிந்தனையில் எடுப்பது நல்லது.