அல்சரை குணப்படுத்தும் டீ:! அதிசயம்!ஆனால் முற்றிலும் உண்மை!

0
169

ஏழைகளின் ஆப்பிள் என்று அழைக்கப்படும் இந்த கொய்யா பழம் மற்றும் கொய்யா இலையில்நம் உடலுக்கு தேவையான அனைத்து நன்மைகளும், உள்ளன.இந்த ஒரு பழத்தை எடுத்துக் கொண்டாலே போதும் நாம் எந்த பழத்தையும் நெருங்கவே தேவையில்லை.அந்த அளவுக்கு அனைத்து விதமான சத்துகளையும் உள்ளடக்கியது இந்த கொய்யா பழம் மற்றும் கொய்யா இலை.அதிலும் கொய்யா இலையில் டீ போட்டு குடித்தால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் ஏற்படும்.கொய்யா டீயினால் ஏற்படும் நன்மைகள் பற்றியும் கொய்யா இலை டீ போடுவது எப்படி என்பதையும் இதில் காண்போம்.

கொய்யா இலையில் நாம் டீ போட்டு குடித்து வந்தால் உடல் எடை குறையும்,முகம் பொலிவாகும்,அல்சர் குணமாகும்.டீ குடித்தால் அல்சர் உண்டாகும் என்று கூறுவார்களே,நீங்கள் டீ குடிக்க சொல்கிறீர்களே என்று கேட்பது புரிகிறது.ஆனால் இந்த டீயில் டீத்தூள்,சர்க்கரை போன்ற கெமிக்கல்ஸ் கலக்க போவதில்லை.இதனாலேயே அல்சர் உள்ளவர்கள் இந்த டீயை குடித்து வந்தால் இதில் உள்ள ஆன்டி ஆக்சிடென்ட்கள் அல்சரை குணமாகும்.

கொய்யா இலையின் டீ போடும் முறை:

கொளுந்தான ஆறு கொய்யா இலையை பறித்து அதை நன்றாக அலசி கொண்டு பின்பு, அதனை இரண்டு டம்ளர் தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும்.இரண்டு டம்ளர் தண்ணீர் ஒரு டம்ளராக வரும் வரை கொதிக்க வைத்து அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வந்தால் வயிற்று சம்பந்தப்பட்ட எந்தவிதமான நோயும் நம்மை விட்டு ஓடும்.ஆனால் இந்த டீயில் சர்க்கரை சேர்க்கக்கூடாது.

கொய்யா இலை கிடைக்காதவர்கள் வாங்கி வரும் நிலையில் சேமித்து வைத்து டீ போடும் முறை:

கொய்யாபழம்
விற்பவர்கள்டையே கொய்யா இலை கிடைக்கும்,கொய்யா இலையுடன் செங்காயாக இருக்கும் கொய்யா காயயையும் வாங்கிவந்து நிழலில்,இந்த கொய்யாக்காய் சிறு சிறு துண்டாக வெட்டி கொய்யா இலையுடன் உலரவைத்து பின்பு காற்றுப் போகாத ஒரு பாட்டிலில் அடைத்து விட வேண்டும்.

பின்பு காலையில் டீ போடும் பொழுது இந்த கொய்யா இலையையும் ஒரு கொய்யா துண்டையும் எடுத்துப் போட்டு கொதிக்கவைத்து குடித்துவர வேண்டும்.இது கல்லீரல் மற்றும் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளுக்கு மிக மிக மிக அருமருந்தாக பயன்படுகிறது.

Previous articleஎந்தெந்த ராசிக்கு இன்றைக்கு எப்படி இருக்கும்? வாங்க பார்க்கலாம்- 10.8.2020
Next articleடான்சில் தொண்டை புண், தொண்டை கரகரப்பு நீங்க அருமையான பாட்டி வைத்தியம்!