வாகன ஓட்டிகளே அலர்ட்! உங்கள் பைக்கில் இதனை முற்றிலும் தவிர்க்க வேண்டும்!
மத்திய அரசு மோட்டர் வாகன சட்டத் திருத்தம் கொண்டு வந்துள்ளது. அந்த சட்ட திருத்தத்தின்படி வாகன விதி மீறல் தொடர்பான அபராதத் தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் இதற்கான அரசானை கடந்த அக்டோபர் மாதம் வெளியிட்டது. மேலும் சென்னை நகர காவல்துறை ஆணையர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. அந்த அறிவிப்பில் கடந்த நவம்பர் 28 ஆம் தேதிக்கு மேல் புதிய வாகன அபராதத் தொகை வசூலிக்கப்படும் என கூறியுள்ளது.
இந்நிலையில் சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளிடம் திருத்தம் செய்யப்பட்ட மோட்டர் வாகன சட்டத்தின்படி கடந்த அக்டோபர் 26 ஆம் முதல் அபராதம் விதிக்கப்படும் என சென்னை காவல் துறை அறிவித்தது. இரு சக்கர வாகன ஓட்டிகள் பலரும் தங்கள் பைக் நம்பர் பிளேட்டை ஸ்டைலாக வைத்து கொள்ள வேண்டும் என வித்தியாசமாக செய்து வருகின்றனர்.
மேலும் பெரும்பாலானோர் பலர் தங்களுடைய கார்கள் மற்றும் பைக்குகளில் விதவிதமான நம்பர் பிளேட்டுகளை பயன்படுதுகின்றனர். அதுமட்டுமின்றி நம்பர் பிளேட்டுகளில் நம்பர்களை சாதாரணமாக எழுதாமல் வித்தியாசமான முறையில் எழுதுகின்றனர்.
இந்நிலையில் தமிழகத்தில் போலீசார் விதிகளை மீறி நம்பர் பிளேட் வைத்திருப்பவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. அவற்றை உடைத்து மாற்ற அறிவிக்கப்பட்டுள்ளது. பைக் வைத்திருப்போர் தங்கள் நம்பர் பிளேட்டில் எந்த ஒரு கூடுதல் டிசைனும் இல்லாமல் வைத்திருக்க வேண்டும்.