மீண்டும் போதை பொருட்கள் அமல்! உயர்நீதிமன்றம் வெளியிட்ட தள்ளுபடி!
கடந்த ஆண்டு தமிழ்நாடு உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறுகையில் போதைப் பொருள் பரவலைத் தடுக்க மத்திய அரசுதான் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கூறினார்.தமிழ்நாடு அரசு போதைப் பொருட்களை ஒழிக்க கடும் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.மேலும் காவல்துறை அதிகாரிகள்,மாவட்ட ஆட்சியர் மாநாடு நடத்தி ஆலோசனை வழங்கப்பட்டது.
இருப்பினும் தமிழ்நாட்டில் முதல்வர் முக ஸ்டாலின் மற்றும் காவல்துறையினர் என பலரும் நடவடிக்கை எடுத்தாலும் தமிழ்நாடு மட்டும் முயற்சி செய்தால் போதை பொருள் பயன்பாட்டை நிறுத்த முடியாது.அதற்காக மத்திய அரசு உதவ வேண்டும் முயற்சி செய்ய வேண்டும்.அதுமட்டுமின்றி போதை பொருட்கள் இவ்வாறு பெருகி இருப்பதற்கு காரணமே மத்திய அரசுதான்.
பிரதமரின் சொந்த மாநிலமான குஜராத்தில் தான் அதிகளவு போதை பொருட்கள் விற்பனையாகின்றது. அதனால் அங்கு தான் முதலில் போதை பொருட்களை ஒழிக்க வேண்டும்.மேலும் உணவுத்துறை ஆணையர் போதை பொருட்கள் விற்பனைக்கு தடை விதித்தார்.அந்த தடையை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.